Home /News /lifestyle /

துணி மாஸ்க்குகளை எப்படி துவைக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?

துணி மாஸ்க்குகளை எப்படி துவைக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?

முககவசம்

முககவசம்

அறுவை சிகிச்சை மற்றும் துணி மாஸ்க்குகள் கொரோனா பரிமாற்ற அபாயத்தை 70% வரை குறைக்கும் அளவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    கொரோனா தொற்றுநோய் காரணமாக முகக்கவசங்கள் இல்லாமல் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகவும் அபாயகரமானது. பரவலாக இருக்கும் தொற்று வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று முகவசங்கள் தான். மேலும் சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் அறுவை சிகிச்சை மற்றும் துணி மாஸ்க்குகள் கொரோனா பரிமாற்ற அபாயத்தை 70% வரை குறைக்கும் அளவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் துணியால் ஆன முகக்கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

    ஏராளமான மக்கள் வசதியான மற்றும் நாகரீகமான துணி முகக்கவசங்களையே பயன்படுத்துகின்றனர். அவை பயன்படுத்த எளிதானவை மேலும் மலிவானவை. நீங்கள் ஒரு பொது இடத்தில் இருக்கும் போது எந்தவொரு வைரஸ் துகள்களும் உங்களை நெருங்காமல் பாதுகாக்க அறுவை சிகிச்சை மற்றும் துணி முகக்கவசங்களை பயன்படுத்துவது போதுமானதாக இருக்கும். அவற்றை பயன்படுத்தும் போது வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் துகள்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நோய்த்தொற்று பாதிப்பு குறைகிறது.

    Isolation | loner | உஷாராக இருங்கள்.. சமூகத்துடன் ஒன்றிணையாமல் இருந்தால் இந்த பிரச்னைகள் வருமாம்..

    நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த கவசங்கள் யாவை?

    உங்கள் துணி முகக்கவசங்களை நீங்கள் அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழி, உயர் தரமான பல அடுக்குகளை கொண்ட துணி மாஸ்குகளை வாங்குவது தான். எதிர்கால பயன்பாட்டிற்காக அவை துவைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்பதால், இது ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு உதவுகிறது. ஆனால், பெரும்பாலான துணி மாஸ்குகளை அடிக்கடி துவைப்பதால் அது பாழடைந்து போகிறது. அவற்றை அணிந்துகொண்டு போவது இயற்கையான சுவாச சுழற்சியை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு செய்வது முகக்கவசங்களின் தரத்தையும் குறைத்து, கொரோனாவுக்கு எதிராக குறைந்த பயனுள்ளதாக துணி மாஸ்க்குகள் மாறிவிடும். எனவே துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசங்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மாற்ற வேண்டும்.



    முகக்கவசங்களை எவ்வாறு சுத்தம் செய்யலாம்?

    உங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கக் கூடிய துணி முகக்கவசங்களின் தரம் காலப்போக்கில் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும். அவற்றை துவைக்கும் போது கடுமையான சலவை மற்றும் ரசாயனங்கள் அவற்றின் பயன்பாட்டை மேலும் பாதிக்கலாம். எனவே மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்களை சூடான நீரில், கிருமிநாசினி கரைசலை சேர்த்து ஊறவைத்து பின்னர் அவற்றை உலர வைக்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உபயோகத்திற்கு பிறகு அவற்றைத் தூக்கிபோடுவதில் நீங்கள் மிகவும் முனைப்புடன் இருக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ், பொருட்களின் மேற்பரப்புகளில் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு இதுதான் காரணமா? 

    பலமுறை உபயோகித்த துணி மாஸ்க்குகளை எப்போது அப்புறப்படுத்தலாம்?

    சரியான கவனிப்பு மற்றும் தூய்மையுடன் துணி முககவசங்களுக்கு காலாவதி தேதியும் உள்ளது. ஒரு முகக்கவசத்தை எப்போது பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான காலவரிசையை சொல்ல இயலாது என்றாலும், நீங்கள் துணி கவசங்களை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள், எத்தனை முறை தூய்மை செய்தீர்கள் என்பதை பொறுத்து மாற்றலாம்.



    எடுத்துக்காட்டாக, நீங்கள் அடிக்கடி பயணிக்கும் மற்றும் வைரஸுக்கு அதிக வெளிப்பாட்டை எதிர்கொள்ளும் ஒருவராக இருந்தால், முகக்கவசங்களை மாற்றுவதற்கான காலவரிசை வேறுபடும். மேலும் மற்றவர்களை விட நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் துணி மாஸ்குகள் மிகவும் பழையதானது போல் உங்களுக்கு தோன்றினால் அவற்றை அப்புறப்படுத்தி நீங்கள் வேறு ஒரு முகக்கவசத்தை உபயோகிக்கலாம்.

    எத்தனை முகக்கவசங்கள் இருக்க வேண்டும்?

    தொற்றுநோய்களின் போது முகக்கவசங்களை பதுக்குதல் ஒரு மோசமான நடைமுறையாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட முகக்கவசங்களை வைத்திருப்பது தற்போதைய சூழ்நிலையில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வைத்திருத்தல், அல்லது நீங்கள் வெளியில் பயணிக்கும் போது இரண்டு முகக்கவசங்களை எடுத்துச் செல்வது உதவியாக இருக்கும்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: CoronaVirus, Mask

    அடுத்த செய்தி