கோவிட்-19 : கோவாக்சின் Vs கோவிஷீல்ட் எது சிறந்தது? தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் உண்டாகுமா?

கொரோனா தடுப்பூசி

பக்கவிளைவுகளை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல எந்த தடுப்பூசியை போட்டு கொண்டாலும் சில அடிப்படை பக்கவிளைவுகள் ஏற்படுவது பொதுவான ஒன்று என குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள்.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல இந்தியாவில் கோவிட்-19 வழக்குகளின் தினசரி பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்ததில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் அதனை உடலில் செலுத்தி கொண்டுள்ளனர். தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்கள் தெரிந்தாலும் கூட, நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள இரு தடுப்பு மருந்துகளையும் பலர் வரமாக பார்க்கின்றனர்.

எனினும் தடுப்பூசி போட்டு கொண்ட நபர்கள் அனுபவித்த பிந்தைய தடுப்பூசி பக்க விளைவுகள் சமீபத்தில் பலருக்கும் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன. ரத்த உறைவு சிக்கல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்ட்ராசெனெகாவின் கோவிட்தடுப்பூசி குறித்த சர்வதேச அக்கறை, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து தங்கள் மதிப்பீட்டை விரிவுபடுத்தும் கட்டாயத்தை இந்திய அரசிற்கு ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவம்:

கொரோனா வைரஸின் வெவ்வேறு அலைகள் மற்றும் உருமாறிய வைரஸின் பாதிப்புகளை சமாளிக்க கடுமையாக போராடி வரும் இந்த நேரத்தில், இந்தியா மட்டுமல்ல உலகின் முக்கிய நாடுகளுக்கும் தடுப்பூசிகள் மிகவும் முக்கிய கேடயமாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், அன்றாடம் வெளியே செல்லும் இளைஞர்களும், முதியவர்களும் கொடிய வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தி கொள்வது காலத்தின் தேவையாகி விட்டது. எனவே தடுப்பூசி தவிர தற்போதைக்கு வேறு தீர்வு இல்லை என்ற நிலையே காணப்படுகிறது.பொதுவான பக்கவிளைவுகள்:

பக்கவிளைவுகளை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல எந்த தடுப்பூசியை போட்டு கொண்டாலும் சில அடிப்படை பக்கவிளைவுகள் ஏற்படுவது பொதுவான ஒன்று என குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள். கோவிட்-19 தடுப்பூசியை போட்டு கொள்ளும் நபர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். இதில் காய்ச்சல், சோர்வு, உடல் வலி மற்றும் குமட்டல் ஆகியவை மிகவும் பொதுவான பக்கவிளைவுகள் என கூறப்படுகிறது.

தடுப்பூசி போடும் இடத்தில் புண், மந்தநிலை / உடல்நலக்குறைவு ஆகியவையும் சில நபர்களுக்கு ஏற்படும். தடுப்பூசிக்கு பின் ஏற்படும் பக்க விளைவுகள் வீட்டிலேயே சமாளித்து கொள்ளும் அளவிற்கு அதிகபட்சம் 3 நாட்களுக்கு நீடிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை தனிநபர்கள் கடுமையான சில எதிர்விளைவுகளை அனுபவிக்க நேர்ந்தால், உடனடியாக அவர்கள் மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் சிறந்தது எது?

ஆபத்தான வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராட மற்றும் சாத்தியமான தொற்றுகளில் இருந்து பாதுகாக்க தேவையான ஆன்டிபாடிகளை உடலில் உருவாக்கும் வகையில் இரு தடுப்பு மருந்துகளும் கண்டறியப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுக்கு எதிரான அதிக செயல்திறன் விகிதங்களை உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும் கோவிஷீல்டு 3 கட்ட சோதனைகளை முடித்துவிட்டது ஆனால் கோவாக்சின் இன்னும் கடைசி கட்ட சோதனையில் உள்ளது.

விலை, டோஸ், பக்க விளைவுகள்: கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை...

பெரிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இன்க் மற்றும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை உருவாக்கியது. தற்போது இந்த தடுப்பு மருந்துகள் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. அதே சமயம் கோவாக்சின் தடுப்பு மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) - தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய ஒரு உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இரண்டும் அதிக செயல்திறன்களை கொண்டுள்ளதால் இரண்டில் எது சிறந்தது என்பது உறுதிப்படுத்த முடியாது என்பது நிபுணர்களின் பதிலாக உள்ளது.அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பக்க விளைவு கவலைகள்

தடுப்பூசி போட்டு கொள்வது காலத்தின் தேவை என்றாலும், ஐரோப்பிய மருந்துகள் ஆணையத்தின் (EMA) சமீபத்திய கண்டுபிடிப்புகள், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் "மிகவும் அரிதான" பக்க விளைவுகளாக அசாதாரணமாக குறைந்த ரத்த பிளேட்லெட்டுகளுடன் கூடிய அசாதாரண ரத்தக் கட்டிகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அசாதாரண ரத்தக் கட்டிகள் மூளை, அடிவயிறு மற்றும் தமனிகளில் உள்ள நரம்புகள் போன்ற இடங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான இந்த பக்கவிளைவுகள் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய இங்கிலாந்து ஆய்வு இந்த தடுப்பூசி குறித்த பரிந்துரைகளைத் திருத்த அதன் கட்டுப்பாட்டாளரைத் தூண்டியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரிக்கிறது.

அலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது: சீரம் நிறுவனம் அறிவிப்பு

என்ன நடவடிக்கை?

அஸ்ட்ராசெனெகா COVID தடுப்பூசியின் அசாதாரண மற்றும் அரிய பக்க விளைவுகள் பற்றிய அறிக்கைகளை தொடர்ந்து,இப்போது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளின் பாதகமான எதிர்விளைவுகளின் மதிப்பீட்டை விரிவுபடுத்த இந்திய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ள இதே போன்ற பாதகமான நிகழ்வுகள் குறித்த தரவை இந்திய கட்டுப்பாட்டாளர்கள் வழங்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அறிக்கைகளின்படி, 19,500 மிதமான வழக்குகள் குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: