Coronavirus : தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு இந்த அறிகுறி தோன்றினால் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை

தடுப்பூசி

தடுப்பூசி போட்டு கொண்டால் அது முழுமையாக தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது அர்த்தமல்ல என்றாலும், கடுமையான கோவிட் அறிகுறிகளின் வாய்ப்புகளை இது குறைக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

  • Share this:
கடந்த சில மாதங்களாக நாட்டை ஆட்டி வைத்து வந்த கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. முதல் அலையில் தப்பி பிழைத்த பலர் இரண்டாம் அலையில் சிக்கி கடும் பாதிப்பிற்குள்ளாகி உயிரையும் இழந்துள்ளனர்.

கோவிட் இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தையும், விரைவில் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கும் மூன்றாம் அலையின் அடிப்படை ஆபத்துகளையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் எல்லோரும் கோவிட் தொற்றுக்கு எதிராக 'முழுமையாக தடுப்பூசி போடுவது' மிகவும் முக்கியமான கேடயமாக கருதப்படுகிறது.

தடுப்பூசி போட்டு கொண்டால் அது முழுமையாக தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது அர்த்தமல்ல என்றாலும், கடுமையான கோவிட் அறிகுறிகளின் வாய்ப்புகளை இது குறைக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஒரு ஆய்வின்படி தங்கள் தடுப்பூசிக்குப் பிறகு தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் பொதுவான அறிகுறிகளை பதிவு செய்துள்ளனர்.சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கோவிட் தடுப்பூசிகள்..

தொற்றுக்கு எதிராக தடுப்பூசி எடுத்து கொண்டுள்ள பலர் சில மாறுபட்ட பக்க விளைவு அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர். கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்களிடையே உடல்வலி, கைவலி, காய்ச்சல், சோர்வு முதல் குமட்டல் வரை பல அறிகுறிகள் காணப்படுகின்றன. இவை தவிர, தடுப்பூசி போட்டு கொண்ட இடத்தில் அரிப்பு, சிவந்து போதல், வீக்கம் போன்றவற்றையும் பலர் அனுபவித்து வருகிறார்கள்.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் அசாதாரண அறிகுறிகள்..

நெருக்கடியான இந்த சூழலில் நம் குடும்பத்தை மற்றும் சமூகத்தை பாதுகாக்க ஒரே வழி தடுப்பூசி போட்டு கொள்வது தான். ஆனாலும் நாம் முன்னரே கூறியபடி வைரஸ் பாதிக்காது என்று உறுதியாக கூற முடியாது. கோவிட் ஷாட் கிடைத்த பிறகும் கூட ஒருவர் தொற்றால் பாதிக்கப்படலாம். எனினும் சில நேரங்களில் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாகவும் மேனேஜ் செய்து கொள்ள கூடிய அளவில் லேசான பாதிப்பாக இருக்கலாம்.

Low Blood Pressure : குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..?

Zoe அமைப்பு நடத்திய ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, தடுப்பூசி போடப்பட்ட பின் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒரு பொதுவான அறிகுறி அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி கூறியுள்ள ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், "தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தும்மல் என்பது தொற்று நோய்க்கான பொதுவான அறிகுறியாக உள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார்.இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி தும்மல் என்பது கோவிட்-19 தொற்றுக்கான பொதுவான அறிகுறி அல்ல. இருப்பினும், ஸோ (Zoe ) கோவிட் அறிகுறி ஆய்வின்படி, "வழக்கத்தை விட தும்முவது கோவிட்டின் அறிகுறியாக இருக்கலாம், ஆனால் இந்த அறிகுறி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மட்டுமே பொதுவாக காணப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவர் சில நாட்களுக்கு பின் காரணமே இல்லாமல் அதிகமாக தும்மினால், உடனடியாக சென்று கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என டிம் ஸ்பெக்டர் பரிந்துரைக்கிறார். தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால் லேசான மற்றும் குறுகிய கால கோவிட் அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்-19 பொதுவான அறிகுறிகள் :

காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, மார்பு வலி மூச்சுத் திணறல், அதிக சோர்வு, இரைப்பை குடல் தொற்று, வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு, மூக்கடைப்பு.

 
Published by:Sivaranjani E
First published: