கோவிட் 3வது அலை இன்னும் சில மாதங்களில் உச்சத்தை எட்டும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மருத்துவ நிபுணர்களும் அடுத்த மாதம் இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளதால், ஒருவிதமான பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. முதல் இரண்டு அலைகளிலும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டு பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட கோவிட் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் இன்னும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை வழங்காத நிலையில், நீண்ட கோவிட் பாதிப்பு மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் கூடுதல் கவனிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நீண்ட கோவிட் அறிகுறிகள் :
புதிதாக வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 5ல் ஒருவருக்கு நீண்ட கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பு சுமார் ஒரு வருடம் வரை நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூச்சுத் திணறல், உடல்நலக்குறைவு, மன அழுத்தம், பதட்டம், தூக்கக்கோளாறுகள், மூட்டு வலி உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
3வது அலையில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
3வது அலை எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது யாராலும் இதுவரை யூகிக்கப்படவில்லை. ஆனால், முன்பைவிட தொற்று பரவல் விகிதம் மற்றும் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வேகமாக பலவீனப்படுத்தக்கூடிய வீரியம் 3வது அலையில் இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், பிந்தைய கோவிட் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு ஆபத்து அதிகம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2வது அலைக்கு முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவிட் பிந்தைய அறிகுறிகளால் ஏற்படும் பாதிப்பு :
கோவிட்டுக்கு பிந்தைய பாதிப்புகள் மூளையில் இருந்து வயிறு வரை என அனைத்து பகுதிகளிலும் தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள் உடனடியாக குணமாவதில்லை. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கி விடுவதால், நீரிழிவு நோய், ரத்த உறைவு கோளாறு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விறைப்பு செயலிழப்பை உருவாக்கும் கோவிட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நீண்ட கோவிட் பாதிப்புள்ளவர்களுக்கு தடுபூசியின் பலன் :
வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொற்றின் தீவிரம் முழுமையாக இல்லாத நிலையில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்டகால கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள், பக்க பாதிப்புகள் இல்லாதபோது மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், கோவிட் பிந்தைய பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. குணமடைந்துவிட்ட நோயாளிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
அண்மையில் குணமடைந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அண்மையில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆபத்தில் இருப்பார்கள். தொற்று பாதிப்பு இருந்ததால், இயற்கையாகவே கோவிட் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும். இருப்பினும், அவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். கோவிட் பிந்தைய அறிகுறிகள் இருந்தால் அதில் இருந்து விடுபட, ஏற்கனவே மருத்துவர்கள் கொடுத்துள்ள வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு 6 மாதங்களில் குறைகிறதாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி செய்யுங்கள், இயல்பு நிலைக்கு செல்லாமல் போதுமான நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19