Home /News /lifestyle /

சருமத்தில் இந்த 5 வகையான பாதிப்பு இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..!

சருமத்தில் இந்த 5 வகையான பாதிப்பு இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..!

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

சாதாரண மற்றும் அசாதாரண அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக, கொரோனா பாதிப்பை முன்கூட்டியே உறுதி செய்ய முடியும். சளி, இருமல் அல்லது சுவை மற்றும் நுகரும் திறன் இழப்பு போன்று எளிதில் அறிந்து கொள்ளும் அறிகுறியாக சரும பாதிப்புகள் இருக்காது

மேலும் படிக்கவும் ...
வரும் முன் தடுப்போம் என்பதே கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.

ஆனாலும் கூட, இந்த வைரஸ் தொற்று உங்களுக்கு ஏற்பட்டு, உடல் பாதிப்பு அடைய தொடங்குமானால், முடிந்த அளவுக்கு அறிகுறிகளை முன்கூட்டியே கணித்தால் மட்டுமே தக்க சமயத்தில் சிகிச்சை எடுக்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் முடியும். கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தவரையில், மூச்சுக்குழாய் கட்டமைப்போடு மட்டும் இது தொடர்புடையது அல்ல. உடலின் பிற பகுதிகளிலும் இதன் அறிகுறிகளை நீங்கள் உணரலாம். குறிப்பாக சருமங்களில் அரிப்பு, தலைவலி, தோள் வலி மற்றும் இதர அறிகுறிகள் தென்படலாம்.

சாதாரண மற்றும் அசாதாரண அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக, கொரோனா பாதிப்பை முன்கூட்டியே உறுதி செய்ய முடியும். சளி, இருமல் அல்லது சுவை மற்றும் நுகரும் திறன் இழப்பு போன்று எளிதில் அறிந்து கொள்ளும் அறிகுறியாக சரும பாதிப்புகள் இருக்காது என்றாலும், அதை நீங்கள் புறந்தள்ள முடியாது. பிரிட்டனில், அண்மையில் 11,544 பேருக்கு பரிசோதனை செய்து, அவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட 8.8 சதவீதம் பேருக்கு சரும பிரச்சினைகள் இருந்துள்ளன.

முதலாவதாக, கோவிட் டிஜிட்ஸ் அல்லது கோவிட் டோஸ் (கொரோனா பாதங்கள்) என்று சொல்லக் கூடிய பாதிப்புகள் ஆகும். இது பாதங்களை சிவப்பு மற்றும் பர்பிள் நிறத்தில் மாற்றி விடும். பொதுவாக குளிர் காலங்களில் ஏற்படக் கூடிய இந்த பாதிப்பு, கொரோனா காலத்தில் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படக் கூடும். மேலும், பாதம் மற்றும் விரல்கள் வீக்கமடையும். ஆனால், அரிப்பு எதுவும் இருக்காது.

இரண்டாவதாக எக்ஸிமா என்ற பாதிப்பு ஏற்படலாம். இதில் தோல் அழற்சி ஏற்பட்டு அரிப்பு, வெடிப்பு மற்றும் தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். கொரோனா பாதிப்பின் போது அல்லது அதற்கு பின்பு எக்ஸிமா பாதிப்பு வரக் கூடும். கழுத்து, மார்பு அல்லது கைகள் போன்ற பகுதிகளே இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றன.



மூன்றாவதாக ஹைவ்ஸ் என்ற அறிகுறி ஆகும். இது திடீரென தோன்றி சில மணி நேரங்கள் நீடிக்கும். சிவந்த, அரிப்பு ஏற்படுத்தக் கூடிய கட்டிகள் உருவாகும். தொடை, பின்புறம், முகம் போன்ற பகுதிகளில் இது வரக் கூடும். கட்டிகளின் அளவு ஒன்றுக்கு, ஒன்று மாறுபட்டதாக இருக்கும்.

எனந்தம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பகுதி அழற்சி, கொரோனாவுக்கான 4ஆவது அறிகுறி ஆகும். குறிப்பாக உதடுகளில் ஏற்படும் இந்த அழற்சி காரணமாக வாய் வறட்சி அடையும். உதடுகள் வீங்கியதை போல காணப்படும். வாய் உள்ளே வீக்கம் ஏற்படுவதால் உணவு அருந்துவது மற்றும் பேசுவது போன்றவை சிரமம் கொண்டதாக இருக்கும்.

கொரோனா பாதித்தவர்களுக்கு நிரந்தரமாக வாசனை தெரியாமல் போகலாம் - ஆய்வு

டிரியாசிஸ் ரோஸியா என்று சொல்லக் கூடிய அழற்சி 5ஆவது அறிகுறி ஆகும். இதில், நெஞ்சு, வயிறு மற்றும் பின்புறம் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் வட்ட வடிவில் அல்லது முட்டை வடிவில் அழற்சி மற்றும் அரிப்பு ஏற்படும். வயிறு, பின்புறம் மேல் பகுதி, கால்கள் மற்றும் கைகளின் மேல் பகுதி ஆகிய இடங்களுக்கும் இந்த பாதிப்பு பரவக் கூடும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, CoronaVirus Symptoms, Skin allergy

அடுத்த செய்தி