• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளை எளிதில் தாக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் - கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

குழந்தைகளை எளிதில் தாக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் - கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

கொரோனா

கொரோனா

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டி, கால்சியம் போன்ற அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உணவில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் பரவி வரும் வேரியண்ட் கொரோனா வைரஸ் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் கூட கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உருமாறிய கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.

இதுவரை குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி நாட்டில் துவங்கவில்லை. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் என நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் வேரியண்ட் கொரோனா வைரஸ் குறித்த நிபுணர்களின் கூற்று பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளை அதிகம் பாதித்து வரும் கோவிட் தொற்று:

நாட்டில் பரவி வரும் புதிய வேரியண்ட் கொரோனா வைரஸானது 8 மாதங்கள் முதல் 14 வயது வரை குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவை மாநிலங்களில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பெரியவர்களைப் போல் அல்லாமல், குழந்தைகளுக்கு வைரஸ் தாக்கத்தின் வெளிப்பாடு குறைவாக உள்ளது மற்றும் கொமொர்பிடிட்டிகளின் (comorbidities) ஆபத்து கூட குறைவாக உள்ளது. எனினும் இந்த இக்கட்டான சூழலில் குழந்தைகள் மீது மிகுந்த கவனம் செலுத்துவதும், கோவிட்டின் இன் பொதுவான அறிகுறிகளைக் கவனிப்பதும் அவசியமாகிறது.



கோவிட் நோய் தொற்றின் பொதுவான அறிகுறிகள்:

ஹார்வர்ட் ஹெல்த்(Harvard Health) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்கு முற்றும் மாறான அறிகுறிகளால் பாதிக்கப்படலாம். பாதிக்கப்படும் குழந்தைகள் குறைவான அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலோ கூட இருக்கலாம். காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் சளி ஆகியவை கொரோன தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 103-104 டிகிரி செல்சியஸ் வரை தொடர்ந்து காய்ச்சல் அடிக்கலாம். 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் தீவிர காய்ச்சல் தொடர்ந்தால் பல்ஸ் ஆக்சிமீட்டரின் உதவியுடன் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணித்து தேவைப்படின் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

பிற அசாதாரண அறிகுறிகள்:

மேற்காணும் வழக்கமான அறிகுறிகளை தவிர, சில நேரங்களில் பெரியவர்களை காட்டிலும் வேறுபட்ட அறிகுறிகளை குழந்தைகள் கொண்டிருக்கலாம். இந்த அறிகுறிகள் மிக குறைவாக தொன்றிலேனும் தற்போதைய நிலையில் அந்த குறைவான அறிகுறிகள் ஒரே நேரத்தில் கவனத்தையும், நோயறிதலையும் பெறுவது அவசியமாகிறது. சில நேரங்களில் குழந்தைகளிடம் காணப்படும் கடும் மற்றும் நீடித்த குளிர் அவர்களின் நுரையீரலைப் பாதிக்கும் நிகழ்வுகள் அல்லது நிமோனியாவின் அறிகுறியாக இருக்கலாம். மூக்கடைப்பு உடலில் ஒரு வைரஸ் இருப்பதை குறிக்கலாம். அதே போல உதடுகள் சிவப்பு நிறத்தில் வெடிப்பது அல்லது முகம் மற்றும் உதடுகளில் நீல நிறம், எரிச்சல், தூக்கமின்மை மற்றும் பசியின்மை ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படும் கோவிட் நோயின் வேறு சில அறிகுறிகள்.



தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.?

குழந்தைகளை அரசு மற்றும் மருத்துவர்கள் கூறியுள்ள கோவிட் விதிமுறைகளை பின்பற்ற வைப்பது கடினம் என்றாலும், அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது உள்ள ஒரே வழி அது தான். சமூக இடைவெளியை பராமரித்தல், மாஸ்க் அணிவது மற்றும் ஆரோக்கியமான சுகாதார பழக்கங்களைப் பின்பற்றுவது போன்ற அடிப்படை COVID விதிமுறைகளை குழந்தைகள் தவறாமல் பின்பற்றுவதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டி, கால்சியம் போன்ற அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உணவில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். மேலும் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்பதால், பருவகால காய்ச்சல் தடுப்பூசியைப் பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் பருவகால காய்ச்சல் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளை பெறலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: