உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த நாடுகள் எடுத்து வருகின்றன. அதேபோல் மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் பலரும் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்று ஐயத்தில் உள்ளனர். உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, வாசனைகளை உணர முடியாமல் இருத்தல், காய்ச்சல், இருமல் போன்றவை கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஆகும்.
எது எப்படியோ SARs – CoV-2 என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது என்பது உறுதியாகி உள்ளது.
ஆய்வுகள் என்ன கூறுகின்றன..?
சமீபத்தில் ஆய்வுகளின் படி ஹைபோஸ்மியா எனப்படும் வாசனை உணர்திறன் குறைவது, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 31% பேருக்கு வாசனை உணர்திறன் குறைவாக உள்ளதாகவே தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ச்சியான தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
ஹைபோஸ்மியா ஏன் ஏற்படுகிறது..?
மூக்கின் உள்ள சுவாச பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போதும் அல்லது அங்குள்ள திசுக்களின் வீக்கம் அல்லது கட்டிகள் போன்றவை ஏற்பட்டாலும் நம்முடைய வாசனை உணரும் திறன் குறைகிறது.
ஆனால் கொரோனா தொற்றினால் உண்டாகும் வாசனை உணர் திறன் குறைவது, மேலே கூறிய எந்த காரணங்களினாலும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் இது உண்டாகிறது.
Also Read : அச்சுறுத்தும் புதிய கொரோனா... கோவிட் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?
மற்ற காரணங்கள் :
ஹைபோஸ்மியா பிரச்சனையானது கூறிய காரணங்களை தவிர மற்ற சில காரணங்களினாலும் ஏற்படுகிறது. ஒவ்வாமை, காய்ச்சல், சைனஸ் பிரச்சனை, தலையில் காயம் ஆகிய காரணங்களினால் உண்டாகலாம்.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான சில முக்கிய அறிகுறிகள்:
பொதுவாகவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான சில அறிகுறிகளை பற்றி ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தும்மல் போன்றவை கொரோனா தொற்று இருப்பதற்கான சில முக்கிய அறிகுறிகள் ஆகும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் போட்டிருந்தாலும், இன்னமும் கூட அதன் பாதிப்புகள் பலரிடமும் காணப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட்டு இருந்தாலும், 60வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும், இதற்கு முன் உடல் நலக் கோளாறுகள் இருந்தாலும் உங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட கூடும்.
எனவே கொரோனா தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள அடிப்படை பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து கொண்டு செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஆகியவை பொதுவான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகும். ஒருவேளை உங்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பது போல் தெரிந்தால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Symptoms, Covid-19