Home /News /lifestyle /

கோவிட் நோய்த்தொற்றின் போது ஏற்படும் இந்த உடல்நலப் பிரச்சனைகள் நீண்ட காலம் இருக்குமாம்..!

கோவிட் நோய்த்தொற்றின் போது ஏற்படும் இந்த உடல்நலப் பிரச்சனைகள் நீண்ட காலம் இருக்குமாம்..!

கொரோனா

கொரோனா

உடல் பருமன் உள்ளவர்களிடையே நீண்ட கோவிட் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

சில காலமாக கொரோனா வைரஸ் நம்மை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் ஒரு கடுமையான நோயாக உள்ளது. இருப்பினும், சில நோயாளிகளுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும் பல்வேறு நீடித்த அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீண்ட காலமாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சில நீண்டகால உடல் நல கோளாறுகள் ஏற்பட கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது 12 வாரங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று இருந்தால் இந்த பாதிப்புகள் உண்டாகுமாம். மேலும் இது பல உறுப்புகளை பாதிக்கலாம். அதே போன்று பலவிதமான நீண்ட கால அறிகுறிகளையும் உருவாக்கலாம். இந்த விசித்திரமான பாதிப்பிற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர், இப்போது ஒரு புதிய ஆய்வு கொரோனா நோய்த்தொற்றின் போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கொரோனா நோய்த்தொற்றின் போது முடி உதிர்தல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவற்றை அனுபவித்தவர்களுடன், வேறு சில பாதிப்புகளும் ஏற்படுகிறது.

மேலும் உடல் பருமன் உள்ளவர்களிடையே நீண்ட கோவிட் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021-க்கு இடையில் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இரு வார ஆய்வுகளில் இருந்து புதிய ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு ஜர்னல் ஆஃப் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.



ஆய்வின் இறுதி மாதிரியில் 308 பாதிக்கப்பட்ட, மருத்துவமனையில் சேர்க்கப்படாத நபர்கள் இருந்து உள்ளனர். இந்த நோயாளிகளில், 23 சதவீதம் பேர் 12 வாரங்களுக்கும் மேலாக நோய்த்தொற்றின் போது புதிய தொடக்க அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதை நீண்ட கால கொரோனா தொற்று பாதிப்பு என்று கருதலாம். நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட இந்த நபர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் தொடர்கிறது என்று அறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி, தலைவலி (22 சதவீதம்), சளி அல்லது மூக்கில் அடைப்பு (19 சதவீதம்), வயிற்று பிரச்சனை (18 சதவீதம்) மற்றும் சோர்வு (17 சதவீதம்) ஆகியவை பொதுவான பாதிப்புகளாக தொடரந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு சோர்வு, தலைவலி, பள்ளி வேலையில் சிரமம், மனநிலை கவலைகள் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய முதன்மையான நீண்ட கால அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? இவங்க எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!

இதே போன்று, தற்போது பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஓமைக்ரான் பாதிப்பு உள்ளவர்களுக்கும் நீண்ட கால தொற்று பாதிப்பின் தாக்கம் இருக்கிறதாம். முன்பிருந்த கொரோனா பாதிப்பை விடவும் நீண்ட நாட்கள் ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உடல்நல கோளாறுகள் நீடிக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே கொரோனா தொற்றுக்கு பிறகும் உங்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona, CoronaVirus Symptoms

அடுத்த செய்தி