இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூமியில் நீடித்து வரும் கொரோனா வைரஸ் இதுவரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது.
தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி சிலருக்கு உள்ளது. ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் COVID-19 வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புகைப்பழக்கம் மற்றும் வேப்பிங் (vaping) நுரையீரலை சேதப்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த பழக்கங்கள் கோவிட்-19 தொற்றுக்கு மக்களை எளிதில் பாதிப்படைய செய்கிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு புதிய ஆய்வு ஒன்று சிகரெட் மற்றும் வேப்பிங் பழக்கங்கள் கடும் கோவிட் நோய் அல்லது கோவிட் நோயினால் உயிரிழக்கும் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளது. கோவிட் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள விரும்பும் ஒருவர் புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்துவது அல்லது குறைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
ஆய்வு..
சமீபத்திய இந்த ஆய்வின் முடிவுகள் PLOS One என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. AHA புகையிலை ஒழுங்குமுறை மையம் மற்றும் லூயிஸ்வில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் COVID-19 இருதய நோய் பதிவேட்டில் பதிவாகி இருக்கும் தரவுகளை ஆராய்ந்தனர். கடந்த ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை கோவிட்-19 நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 4,000 பேர் தொடர்பான தகவல்கள் இதில் அடக்கம்.
இந்த ஆய்வில் சிகெரெட் பழக்கம் உடையவர்கள் மற்றும் இ-சிகரெட்களை பயன்படுத்துபவர்கள் ஆகிய 2 பிரிவினரும் புகைப்பிடிப்பவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த ஆய்வின் சில வரம்புகளில் பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகள் அல்லது பிற புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள் மற்றும் எத்தனை வருடங்களாக பயனப்டுத்தி வருகிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கும்.
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?
ஆய்வு கண்டுபிடிப்புகள்...
சிகெரெட் அல்லது வேப்பிங் செய்யும் நபர்கள் அவர்களின் வயது, பாலினம் அல்லது மருத்துவ வரலாறு உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல், அதிக கோவிட்-19 இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆபத்துக்கான மதிப்பீடுகள் நாங்கள் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் புகையிலை பொருட்களை பயன்படுத்தியவர்கள், இப்பழக்கம் இல்லாதவர்களை விட 39% அதிகமாக மெக்கானிக்கல் வென்டிலேஷனில் இருப்தை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
தவிர கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகைப்பழக்கம் உள்ளவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 45% அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது. புகைப்பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்பதை இந்த முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
வயதின் தாக்கம்...
புகைபிடிப்பவர்களிடையே கோவிட் தொற்று இறப்பு அபாயத்தை அதிகரிப்பதில் நோயாளியின் வயது ஒரு பங்கைக் கொண்டிருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை காட்டிலும், 18 - 59 வயது வரையில் உள்ள புகைப்பிடிப்பவர்கள் கோவிட்டால் இறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக கோவிட் தொற்று முதியவர்களை அதிகம் தாக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆயுள் குறைவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
பிற ஆபத்து காரணிகள்..
கறுப்பின மற்றும் ஹிஸ்பானிக் நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், புகைப்பழக்கம் கொண்ட வெள்ளை நிறத்தினருக்கு COVID-ஆல் மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நிலைமைகளை கொண்ட ஸ்மோக்கர்ஸ் COVID-19 பாதிப்பால் இறப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
வேப்பிங் மற்றும் கோவிட்-19 ஆபத்து..
இ-சிகரெட் பயன்படுத்துபவர்கள் கோவிட் தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகலாம். ஏனென்றால் வேப்பிங் நேரடியாக நுரையீரலை சேதப்படுத்துகிறது. இ-சிகரெட்டில் புரோபிலீன் கிளைகோல், கிளிசரால் போன்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன. மேலும் பல இ-சிகரெட் தயாரிப்புகளில் அதிக அளவு நிகோடின் உள்ளது. இது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் இதய அமைப்புகளை பாதிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus Symptoms, Smoking