கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி பரிசோதனை தேவை..!

கொரோனா

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் பாதுகாப்பாக வாழலாம்.

  • Share this:
இந்தியாவில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பாதிப்பால் தினசரி பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், இந்தியா தொடர்ந்து அதிக மீட்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் பாதுகாப்பாக வாழலாம். இருப்பினும், SARS-COV-2 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு மக்களுக்கு சில நீடித்த விளைவுகள் ஏற்படலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்புகளின்படி, இப்போது லேசான அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கூட சில நீண்டகால சிக்கல்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவை கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் சேதத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நீண்டகால சிக்கல்களைத் தூண்டும்:

கொரோனா பாதிப்பு நீண்டக்கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நாள்பட்ட சுகாதார பிரச்சினைகள் அல்லது மோசமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் அபாயத்தில் இருப்பவர்களுக்கு, கூடுதல் கவனிப்பு தேவைப்படும் மருத்துவ நிலைமைகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் இருதய ஈடுபாடு அதிகரித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன. சிலருக்கு புதிதாக நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் வரலாம் என்றும், சிறுநீரக பாதிப்பு கூட SARS-COV-2 வைரஸால் தூண்டப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.COVID உங்கள் முக்கிய ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு எவ்வாறு பாதிக்கும்?

கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை கடுமையான COVID நோய்த்தொற்றுடன் போராடுவோருக்கு இருதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு பல மடங்கு அபாயங்கள் ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. எனவே கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு பின்தொடர்தல், திரையிடல்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தேவைப்படுவது மட்டுமல்லாமல், அவர்களில் ஏற்படும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த சிக்கல்கள் கொரோனாவில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

நீண்ட கால கொரோனா பாதிப்பு ஒரு நோய்க்குறியாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு கொரோனா நோயாளி மீண்ட 4 வாரங்களுக்குப் பிறகு நோயின் அறிகுறிகளைத் தொடர்ந்து அனுபவிப்பதாக கூறப்படுகிறது. 4 கொரோனா நோயாளிகளில் ஒருவர் நீண்ட பாதிப்புகளை கொண்டவர்கள் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களில் நீடித்த இருமல், நாள்பட்ட பலவீனம், தலைவலி, மயால்ஜியா, மூளை ஃபாக் போன்ற அறிகுறிகள் குணமடைந்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் பிறகும் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு சுவாச நோய்த்தொற்றாக இருந்தாலும், ஒன்றோடொன்று இணைந்த இயல்பு ஒருவரின் வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் அழற்சி ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் காணப்படுகின்ற பொதுவான சிக்கல்கள் மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?1. நீரிழிவு நோய்

COVID-19 நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் கொமொர்பிடிட்டியாக கருதப்படுகிறது. வைரஸ் கணையம் போன்ற முக்கிய உறுப்புகளுக்குள் ஊடுருவி இன்சுலின் ஒழுங்குமுறைக்கு இடையூறு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பின் போது தங்களது இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதைக் காணலாம். கொரோனா வகை -1 மற்றும் வகை -2 நீரிழிவு இரண்டையும் தூண்டக்கூடும் என்பதால், நோயாளிகள் கீழ்காணும் அறிகுறிகளை பெறலாம்:

*அதிக தாகம், அடிக்கடி பசி
* மங்களான பார்வை
* மெதுவான சிகிச்சைமுறை, உணர்திறன் வாய்ந்த தோல்
* சோர்வு
* இன்டென்ஸ் பசி

எனவே, கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கை, கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஆகியவற்றை புறக்கணிக்கக்கூடாது. ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு அடிக்கடி குளுக்கோஸ் மற்றும் இரத்த சர்க்கரை பரிசோதனைகள் செய்யுங்கள்.

CoronaVirus : ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் 5 இயற்கை வழிகள்!

2. மயோர்கார்டிடிஸ் மற்றும் இதய ஈடுபாடு:

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்ட பிறகு இரத்த உறைவு, மாரடைப்பு ஆகிய பாதிப்புகளுக்கு உள்ளாவதாக அதிகரித்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் ஆரோக்கியமான வயதினரின் இதயத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் மூச்சுத் திணறல், மார்பு வலி, சோர்வு போன்ற பல அறிகுறிகள் ஏற்படக்கூடும். அரித்மியாஸ் (ஒழுங்கற்ற இதயத் துடிப்பு), மயோர்கார்டிடிஸ் (அழற்சி) மற்றும் பிற இருதய சிக்கல்களும் கூட தாக்கக்கூடும் என்று இருதய பராமரிப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதேபோல இருதய ஈடுபாட்டின் அறிகுறிகளைத் தீர்மானிப்பது கடினம் என்றாலும், வீக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் 5ம் நாளிலேயே தாக்கக்கூடும் என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கட்டாய பரிசோதனை தேவை என்றும் தெரிவித்துள்ளனர். இது தவிர, இதய ஆரோக்கியம் குறைந்து வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு:

*அசௌகரியம்
* கையில் வலி அல்லது அழுத்தம்
* மூச்சு திணறல்
* கட்டுப்பாடற்ற அல்லது நிலையற்ற இரத்த அழுத்தம்
* ஒழுங்கற்ற இதய துடிப்பு, மன அழுத்தம்

3. உளவியல் கோளாறுகள்

2020ம் ஆண்டு முதல் இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து வெளிவந்த மருத்துவ மதிப்பீடுகள், மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை தேவைப்படுவதையும் நரம்பியல் மற்றும் உளவியல் கோளாறுகளுக்கு ஆலோசனை தேவைப்படுவதையும் கண்டறிந்தன. குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட பெண்கள் மனநலக் கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் பரிசோதனைகளை பெற மருத்துவர்கள் இப்போது நோயாளிகளை பரிந்துரைக்கிறார்கள். அறிகுறி கட்டத்தில் COVID-19 ஆல் ஏற்படும் நரம்பியல் சேதத்தை கருத்தில் கொண்டு, குணமடைந்த பிறகு வரும் சில அறிகுறிகள் குறித்து காண்போம்.

* பலவீனமான சிந்தனை, செறிவு இல்லாமை
* நீண்டகால நீடித்த நினைவக இழப்பு
* உயர்ந்த மன அழுத்தம் மற்றும் பதட்டம்
* தூக்கமின்மை
* ஆதரவு இல்லாமல் பணிகளைச் செய்வதில் சிரமம்

COVID-19 இலிருந்து மீண்டு வாரங்கள் கழித்து மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் தொடர்ந்து கவனித்தால், மனநல மதிப்பீட்டை மேற்கொள்வது மற்றும் கூடுதல் உதவியைப் பெறுவது நல்லது.4. சிறுநீரக நோய்:

கொரோனா வைரஸின் கடுமையான வடிவங்களால் பாதிக்கப்பட்ட சிலர் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகளைக் பெறுகிறார்கள். முன்னதாக சிறுநீரகம் தொடர்பான எந்தவித அடிப்படை பிரச்சினைகளும் இல்லாதவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதிக அளவு புரதம் மற்றும் அசாதாரண இரத்த அழுத்தம், பிரபலமற்ற COVID- தூண்டப்பட்ட சைட்டோகைன் புயல் அல்லது ஆக்ஸிஜன் அளவு ஏற்ற இறக்கமும் சேதத்தை ஏற்படுத்தும். ஆயினும்கூட, சிறுநீரக பாதிப்பு கடுமையானதாக இருக்கக்கூடும், மேலும் கவனிப்பு தேவைப்படுவதால், ஆரம்ப அறிகுறிகள் நோயறிதலுக்கும் உதவும். சிறுநீரக ஆரோக்கியம் மோசமடைவதற்கான சில அறிகுறிகள்:

* வீங்கிய கணுக்கால், அடி
* அதிகப்படியான சிறுநீர் கழித்தல்
* சிறுநீரின் நிறம் அல்லது அமைப்பில் மாற்றம்
* அதிக எடை இழப்பு
* செரிமான பிரச்னை, பசியின்மை
* இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவில் உயர்வு. ஆகியவை

எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் பெற்றால் உனடடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம். இல்லையென்றால் து நீடித்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: