Home /News /lifestyle /

கோடை காலத்தில் ஜலதோஷம்  பிடிப்பது கொரோனாவின் அறிகுறியா..? வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

கோடை காலத்தில் ஜலதோஷம்  பிடிப்பது கொரோனாவின் அறிகுறியா..? வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

சளி

சளி

யாருக்காவது சளி பிடித்துவிட்டாலே ஒருவேளை இவருக்கு கொரோனாவாக இருக்குமோ? என அஞ்சி விலகும் அளவிற்கு மக்கள் மத்தியில் கோவிட் 19 கோரதாண்டவம் ஆடியுள்ளது.

யாருக்காவது சளி பிடித்துவிட்டாலே ஒருவேளை இவருக்கு கொரோனாவாக இருக்குமோ? என அஞ்சி விலகும் அளவிற்கு மக்கள் மத்தியில் கோவிட் 19 கோரதாண்டவம் ஆடியுள்ளது. ஜலதோஷம் பிடிப்பதால் உருவாகும் பல அறிகுறிகள் கோவிட் அறிகுறிகளுடன் ஒத்துபோகின்றன. எனவே, ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது அது வேறு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது.

கோடைக்காலத்தில் சளி பிடிப்பதும் மற்றும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கும் இடையில் ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ளன. இந்த இரண்டு உடல்நலப் பிரச்சினைகளையும் பொதுவான அறிகுறிகளிலிருந்து வேறுபடுத்துவது கடினம். இருப்பினும், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாட்டைத் தெளிவாகக் குறிப்பிடும் சில அறிகுறிகள் உள்ளன மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை சரியான முறையில் எடுக்க உதவும் அறிகுறிகளை பற்றிக் காணலாம்...

கோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில் சளி பிரச்சனையை எதிர்கொள்வது அனைவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. கோடை காலத்தில் அதிக அளவில் ஏசியை பயன்படுத்துவது, குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவு குளிர் காலத்தில் ஏற்படுவது போலவே தான் இருக்கும் மற்றும் தொற்று ஏற்பட்ட 5-7 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 

 

 

கோடை கால ஜலதோஷத்தின் அறிகுறிகள் என்னென்ன?

சளி, ஒவ்வாமை, தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், வியர்வை மற்றும் காய்ச்சல் போன்றவை கோடை கால ஜலதோஷத்தின் போது ஏற்படும் பல்வேறு அறிகுறிகளாகும். குளிர்காலத்தைப் போலல்லாமல் கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக வெளியில் இருப்பதாலும், வறண்ட காற்று வைரஸுக்கு சரியான இனப்பெருக்கத் தளத்தை வழங்குவதாலும் கோடைக்காலத்தில் ஜலதோஷ பிரச்சனைகள் ஏற்பட காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீட்டிலேயே செய்யக்கூடிய கார்டியோ பயிற்சிகள்.. சாரா அலி கான் ஃபிட்னஸ் டிரெய்னர் பகிர்ந்த வீடியோ...

கோடை கால ஜலதோஷம், கோவிட் தொற்று வேறுபாடு என்ன?

கொரோனா தொற்றிலிருந்து மட்டுமல்ல பிற வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கவும் ஆண்டு முழுவதும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவதும், கைகளை கழுவதும் பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோடை காலத்தில் சளித் தொந்தரவு ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

கோடைக்கால ஜலதோஷத்தின் அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரத்திற்குள் மறைந்துவிடும், ஆனால் அவை நீண்ட காலத்திற்குத் தெரிந்தால் மருத்துவரை அணுகி கோவிட் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் முற்றிலுமாக குறையவில்லை. உலக சுகாதார மையத்தின் அறிக்கையின் படி, ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் அதன் துணை மாறுபாடான BA.2 வைரஸால் தற்போது தொற்று பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொரோனா அபாயம் நீக்கிவிட்டதாக எண்ணி, பொது வெளிகளில் அலட்சியம் காட்டுவது ஆபத்தை உருவாக்கலாம்.

தொண்டை புண், உடல் வலி, தலைவலி, தொண்டை எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஆகியன ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

பொதுவாக ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி மற்றும் வயிற்று வலி காணப்படுவதில்லை. எனவே, உங்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல் மற்றும் வயிற்று வலி இருந்தால், உடனடியாக கோவிட் பரிசோதனை செய்து, நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cold, Corona Symptoms, Covid-19, Summer tips

அடுத்த செய்தி