Home /News /lifestyle /

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வருமா? எப்படி இதை சமாளிப்பது..?

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வருமா? எப்படி இதை சமாளிப்பது..?

ஓமைக்ரான் வகை கொரோனா

ஓமைக்ரான் வகை கொரோனா

இந்த புதிய வகை ஓமைக்ரான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுக்காக்க கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். அமெரிக்காவில் Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளின் மூன்றாவது பூஸ்டர்கள் ஓமைக்ரான் வகை கொரோனாவில் காக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
கடந்த சில வாரங்களாக கொரோனா மூன்றாம் அலை பற்றிய பேச்சுகள் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், புதிதாக தோன்றியுள்ள ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தான். ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த வைரஸ் திரிபு தற்போது உலக நாடுகள் பலவற்றில் காட்டு தீ போன்று பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் ஊரடங்கு தொடங்குவது பற்றிய செய்திகளை பார்க்கும் போது இந்தியாவிலும் இப்படியொரு நிலை உருவாகுமா என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கிலேயே வாழ்க்கை சென்றது. ஊரடங்கு காரணத்தால் பலர் மிகவும் அவதிப்பட்டனர். இந்த வருடத்தின் நடுப்பகுதியில் உருவான கொரோனா இரண்டாம் அலையானது முதல் அலையை காட்டிலும் வீரியம் நிறைந்ததாக இருந்தது. இதனால் பலர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டனர். தற்போது உருவாகியுள்ள ஓமைக்ரான் வைரஸ் அதிக அளவில் உலகெங்கும் பரவி வருவதால் கொரோனா மூன்றாம் அலையை பற்றி மக்கள் சிந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனாவுக்கு இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 மாநிலங்களில் இந்த ஓமைக்ரான் பாதிப்பு இருந்து வருகிறது. மஹாராஷ்ட்டிரா மற்றும் டெல்லியில் ஓமைக்ரான் வைரஸ் அதிக அளவில் உள்ளது. வெறும் இரண்டே வாரத்தில் நோய் தொற்றின் அளவு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த தரவுகளை வைத்து தான் கொரோனா மூன்றாம் அலையை உண்டாக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு அதிக பேரின் உயிரை காவு வாங்கிய டெல்டா வகை கொரோனாவை விடவும் ஓமைக்ரான் வகை கொரோனா மூன்று மடங்கு அதிகமாக பரவ கூடியதாக உள்ளது.



2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓமைக்ரான் கொரோனாவின் பரவல் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு 7500 பேர் ஓமைக்ரான் வகையினால் பாதிக்கப்பட கூடும் என்று தேசிய கோவிட்-19 சூப்பர்மாடல் கமிட்டி கணித்துள்ளது. இது வரை கிடைத்த தரவுகளின்படி, டெல்டா வகையை விடவும் இந்த ஓமைக்ரான் வகை கொரோனா பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனினும் இது வீரியம் கொண்டதாக உருமாற என்பதை இன்னும் சில வாரங்கள் பொறுத்து தான் அறிந்து கொள்ள முடியும்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களை ஓமைக்ரான் வகை கொரோனா பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த புதிய வகை ஓமைக்ரான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுக்காக்க கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். அமெரிக்காவில் Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளின் மூன்றாவது பூஸ்டர்கள் ஓமைக்ரான் வகை கொரோனாவில் காக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும், இது வரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டு கொள்வது சிறந்தது.



வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழா நாட்கள் வரவிருப்பத்தால், ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க செய்யலாம். எனவே பண்டிகை நாட்கள் முடிந்த பிறகு தற்போதுள்ள பரவல் எண்ணிக்கையை விடவும் பல மடங்கு இது உயர வாய்ப்புள்ளது. உலக நாடுகளை போன்று அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் இதன் பாதிப்பு புத்தாண்டிற்கு பிறகு பல மடங்கு கூடுவதற்கு வாய்ப்புண்டு. எனவே முடிந்த அளவு கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள். வெளியில் செல்லும்போது அவசியம் முகக்கவசம் அணித்திடுங்கள். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மட்டுமே நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி