Home /News /lifestyle /

லாங் கோவிட் என்றால் என்ன..? எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்..? விவரங்கள் இங்கே...

லாங் கோவிட் என்றால் என்ன..? எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்..? விவரங்கள் இங்கே...

கொரோனா அறிகுறிகள்

கொரோனா அறிகுறிகள்

அடிக்கடி அல்லது தொடர்ந்து சோர்வு, மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், நினைவாற்றல் அல்லது தூக்கம் சார்ந்த சிக்கல்கள், தொடர் இருமல், நெஞ்சு வலி, தசை வலிகள், வாசனை அல்லது சுவை இழப்பு, மனச்சோர்வு, காய்ச்சல், தலைசுற்றல் உள்ளிட்டவை லாங் கோவிட்-ன் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மருத்துவ சமூகம் கற்று கொண்ட மற்றும் கற்று கொண்டு வரும் விஷயங்கள் ஏராளம்.

தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கோவிட் பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு இருக்கும். இதை கோவிட்க்கு பிந்தைய நிலை (post COVID condition) என்று WHO குறிப்பிடுகிறது. எனினும்சுகாதார வல்லுநர்கள் இந்த நிலையை லாங் கோவிட் கண்டிஷன் (long COVID condition) என கூறுகின்றனர்.

அதாவது லாங் கோவிட் என்பது SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு வழக்கத்தை விட நீண்ட காலத்திற்கு மக்கள் தொடர்ந்து கோவிட்-19 அறிகுறிகளை அனுபவிக்கும் நிலையாகும். லாங் கோவிட் நோயின் பல அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. எனவே இந்த நிலை கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இருப்பினும் சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சையின் மூலம் இந்த நிலையை பெரிய அளவில் குறைக்க முடியும்.

லேசான கோவிட் அறிகுறி கொண்டிருந்தவர்கள் லாங் கோவிட்டால் பாதிக்கப்படுவார்களா?

ஆம். ஏனென்றால் கோவிட் அறிகுறிகள், அதன் தீவிரம் மற்றும் லாங் கோவிட் ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட எவரும் கோவிட்-19-க்குப் பிந்தைய நிலைமைகளால் பாதிக்கப்படலாம். சமீபத்திய ஆய்வின் படி சுமார் 10% - 20% கோவிட்-19 நோயாளிகள், கோவிட்-19-க்கு பிந்தைய நிலையில் இருக்கும் நீண்ட கால அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள்.



லாங் கோவிட்-ன் பொதுவான அறிகுறிகள்..

அடிக்கடி அல்லது தொடர்ந்து சோர்வு, மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், நினைவாற்றல் அல்லது தூக்கம் சார்ந்த சிக்கல்கள், தொடர் இருமல், நெஞ்சு வலி, தசை வலிகள், வாசனை அல்லது சுவை இழப்பு, மனச்சோர்வு, காய்ச்சல், தலைசுற்றல் உள்ளிட்டவை லாங் கோவிட்-ன் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை : இந்த அறிகுறிகளை உடனே கவனம் செலுத்துங்கள்..!

லாங் கோவிட் சிக்கலை ஏன் அடையாளம் காண வேண்டும்?

SARS-CoV-2 நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு பல அறிகுறிகள் இருப்பதை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது லாங் கோவிட் . பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை லாங் கோவிட் கணிசமாகக் குறைக்கும் என்பதால், இதன் விளைவுகளை அடையாளம் காண வேண்டிய அவசர தேவை இருப்பதாக வலியுறுத்துகின்றனர் நிபுணர்கள்.



குறைந்தப்பட்ச உடல் உழைப்பு செய்தால் கூட சோர்வு ஏற்படுகிறது.. இது லாங் கோவிட்டா?

இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். கோவிட்டில் இருந்து பிழைத்தவர்களில் ஐந்தில் ஒருவர், சுமார் 5 வாரங்களுக்குப் பிறகு லாங் கோவிட் அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள். மேலும் 12 வாரங்கள் வரை அதை அனுபவிக்கிறார்கள். கோவிட்-19க்குப் பிந்தைய நிலைகள் பொதுவாக கோவிட்-க்கு மூன்று மாதங்களுக்கு பிறகு கண்டறியப்படும் என்றும் அறிகுறிகளும் விளைவுகளும் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் WHO சில மாதங்களுக்கு முன் கூறியது.

குழந்தைகளுக்கு இதய அபாயத்தை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

லாங் கோவிட் எதனால் ஏற்படுகிறது?

லாங் கோவிட் நிலைக்கு பின்னால் உள்ள சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை . காரணத்தை கண்டறிய நுண்ணுயிர் உறைதல், பலவீன நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பலவீன வளர்சிதை மாற்றம், ரத்தக் கட்டிகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு நடந்து வருகிறது.



லாங் கோவிட் எவ்வளவு நாள் நீடிக்கும்?

தொற்று பாதிப்பிற்குள்ளான பலர் 2-3 மாதங்கள் வரை அறிகுறிகளை அனுபவித்தாலும், ஒரு சிலர் லாங் கோவிட் நிலைமைகளை நீண்ட காலத்திற்கு இன்னும் சொல்ல போனால் அதை கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Symptoms, Covid-19

அடுத்த செய்தி