Home /News /lifestyle /

நீங்கள் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் : எப்படி தெரியுமா..?

நீங்கள் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் : எப்படி தெரியுமா..?

கொரோனா

கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மீண்டும், மீண்டும் தொற்றுக்கு ஆளாவதற்கு வைரஸின் புதிய பிறழ்வுகள் (வேரியன்ட்) காரணமாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபட்ட வேரியன்ட் ஆன ஓமிக்ரானின் தோற்றம் மற்றும் பரவலுக்கு முன்னதாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் முந்தை ஆய்வுகளுடன் ஒப்பிடும் போது, பிற வேரியன்ட்களை விட ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் தொற்றும் திறன் கொண்டது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கொரோனா கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில், டெல்டாவால் விட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாக 5.4 மடங்கு அதிக வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது முன்பு டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட 5 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மக்களுக்கு ஏன் இரண்டாவது முறையாக அல்லது மீண்டும், மீண்டும் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



1. புதிய வகைகள் மற்றும் வைரஸ்களின் மறுசீரமைப்பு:

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மீண்டும், மீண்டும் தொற்றுக்கு ஆளாவதற்கு வைரஸின் புதிய பிறழ்வுகள் (வேரியன்ட்) காரணமாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வைரஸின் மரபணுப் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள், அவை அவற்றை அதிதீவிரமாக பரவக்கூடிய, கடுமையான அல்லது தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட தடுக்கும் அளவிற்கு வலிமையானதாக மாற்றுகின்றன.

வைரஸின் கட்டமைப்பு மற்றும் ஸ்பைக் புரதம் காலப்போக்கில் மாறுவதால், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் தொற்றுக்கான வைரஸ்களை அடையாளம் காணமுடியாமல் போகிறது. இதனால் தான் ஒருவர் மீண்டும் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், BA.2 'ஸ்டீல்த்' என்ற ஓமிக்ரானை விட விரைவாக பரவக்கூடிய புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளிலும் BA.2 ஐ விட 10 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய XF, XD மற்றும் XE வைரஸ் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.



2. முந்தைய கொரோனா தொற்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது:

நீங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவுடன், உங்கள் உடல் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, வைரஸ் துகள்களை நினைவில் கொண்டு, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதேசமயம், உங்கள் உடல் நீண்ட காலமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கும் பட்சத்தில் உடல் அதற்கான ஆன்டிபாடிகளை உருவாக்குவதை குறைத்துக் கொள்கிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, புதிய வகை கொரோனா தொற்றுக்கு மீண்டும் ஆளாவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் 5 முக்கிய உணவுகள் : என்னென்ன தெரியுமா..?

3. தடுப்பூசி செயல்திறன் குறைவது:

SARs-CoV-2 நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்த வழியாக உள்ளது. கடந்த காலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக இருந்தால், அது வைரஸுக்கு எதிராக இரட்டிப்பு பாதுகாப்பை தருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ்களின் புதிய வகைகள் தடுப்பூசியால் கிடைக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்க கூடிய அளவிற்கு வலுவானதாக இருப்பதால், மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே தான் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இவை இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை நோய்த்தடுப்பு ஆன்டிஜெனுக்கு மீண்டும் வெளிப்படுத்த உதவுகிறது.



4. எவ்வளவு விரைவாக தொற்றுக்கு மீண்டும் ஆளாகலாம்:

நீங்கள் எவ்வளவு விரைவில் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பது குறித்து எவ்வித தரவுகளும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கணிப்பு படி , “முதல் தொற்றால் பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் வரை ஒருவரை மீண்டும் பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும், அதே சமயம் அந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பாட்டாலோ அல்லது அது பிற நோய்களின் அறிகுறியாக இல்லாவிட்டாலோ சோதனை செய்து பார்க்கலாம்” எனக்கூறுகிறது.

5. அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

உலகின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது அவசியமாகிறது. கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அறிகுறிகள் மேம்படும் வரை உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனையை நாடலாம், அதன் முடிவு கிடைக்கப்பெறும் வரை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதும் மற்றும் கையை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதும் தொற்றிலிருந்து காக்க உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus Symptoms, Covid-19

அடுத்த செய்தி