Coronavirus : டெல்டா வகை வைரஸால் யாருக்கெல்லாம் பாதிப்பு..? பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை..!

டெல்டா வகை வைரஸ்

டெல்டா வேரியண்ட் உள்ளிட்ட புதிய வகைகளுக்கு எதிராக சில கோவிட் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

  • Share this:
கோவிட் தொற்றின் இரண்டாம் அலை எதிர்பாராத வகையில் மின்னல் வேகத்தில் பரவி சில மாதங்களுக்கு நடை முழுவதுமாக முடக்கி போட்டு விட்டது. கொத்து கொத்தாக உயிர்களையும் பறித்து சென்றுவிட்டது. கடும் சவாலாக இருந்த தொற்றின் இரண்டாம் அலையிலிருந்து நாடு படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் வேளையில், கோவிட் வைரஸின் அடுத்தடுத்த வேரியண்ட்டுகள் மூலம் மீண்டும் மிகப்பெரிய சவாலான சூழலை நாடும், மக்களும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

தற்போது நாட்டில் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வரும் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வேரியண்ட்டுகள் இரண்டும் மனித உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிகிறது. துவக்கத்தில் வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் நிலைமை கொண்டவர்கள் மட்டுமே அதிக SARs-COV-2 வைரஸ் ஆபத்தில் இருந்த நிலையில், தற்போது வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தொற்று தாக்க கூடிய அபாய வளையத்திற்குள் உள்ளனர்.



மிகவும் மாறுபட்ட வேரியண்ட்டுகள்:

உலகில் நாவல் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய பிறகு உருமாறி பல்வேறு புதிய வேரியண்ட்கள் உருவாகி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி மிகப்பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. பல்வேறு நாடுகளில் இரண்டாம் அலையை வீரியமாக்கிய டெல்டா வேரியண்ட் தற்போது அதிலிருந்தும் உருமாறி உள்ளது. இதற்கு டெல்டா பிளஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வேரியண்ட்கள் கோவிட்-19 இன் மிகவும் மாறுபட்ட வகைகளாக தற்போது இருந்து வருகின்றன. டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரு வகைகளும் மிகுந்த கவலைக்குரியவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.டெல்டா பிளஸ் வேரியண்ட் அதி வேகத்தில் பரவ கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த டெல்டா பிளஸ் வேரியண்ட் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.



புதிய வேரியண்ட்டுகளுக்கு எதிராக புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் பயனுள்ளவையா?

துவக்கத்தில் அசல் கோவிட் ஸ்ட்ரெய்ன் அதாவது ஆல்பா வேரியண்ட்டை பொறுத்து தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி தற்போது பரவி வரும் மேற்காணும் புதிய வேரியண்ட்கள் தடுப்பூசிகளால் வெளியிடப்படும் ஆன்டிபாடிகளை மிஞ்சும் திறனை கொண்டுள்ளன. அதாவது தடுப்பூசியால் உருவாகும் நோயெதிர்ப்பு பாதுகாப்பிலிருந்து தப்பிக்கும் பண்புகள் உருமாறிய புதிய வைரஸ்களில் இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இது தடுப்பூசி மூலம் ஒருவர் பெறும் பாதுகாப்பை தடுக்கும் வகையில் இருக்க கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் டெல்டா வேரியண்ட் உள்ளிட்ட புதிய வகைகளுக்கு எதிராக சில கோவிட் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. நம் நாட்டில் அதிகஅளவில் புழக்கத்தில் இருக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தவிர, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் டெல்டா வேரியண்ட்டிற்கு எதிராக திறம்பட செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியானது, கோவிட்டால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் புதிய டெல்டா பிளஸ் வேரியண்ட்டிற்கு எதிராக புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் பயனுள்ளவையாக இருக்குமா என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இதுவரை இல்லை.



யாருக்கு அதிக ஆபத்து.?

Public Health England-ஐ சேர்ந்த இங்கிலாந்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, டெல்டா வேரியண்ட் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இளம்வயதினர், தடுப்பூசி போடாத நபர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்கள் ( முதல் டோஸ் மட்டுமே போட்டு கொண்டுள்ளவர்கள்) உள்ளிட்டோர் புதிய வேரியண்ட்டால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர். பிப்ரவரி துவக்கத்தில் இருந்து ஜூன் நடுப்பகுதி வரை செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 92,029 பேர் டெல்டா வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 82,500-க்கும் மேற்பட்டோர் 50 வயதை தாண்டியவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள். எவ்வாறாயினும், டெல்டா வேரியண்ட் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இங்கிலாந்தில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இதில் 50 வயதிற்கும் மேற்பட்டோர் அதிகம். 50 வயதிற்கும் குறைவானவர்கள் 8 பேர் இறந்துள்ளதாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட இருவரும் இதில் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delta Variants : டெல்டா வகை வைரஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் - ஆய்வு..!

Public Health England வெளியிட்டுள்ள தகவல்களை வைத்து பார்த்தால் வயதானவர்கள் மற்றும் இளைய வயதினர் என இரு தரப்பையுமே டெல்டா வேரியண்ட் தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே பொறுப்பாகவும், விழிப்புடனும் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளை போல இனியும் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.

 
Published by:Sivaranjani E
First published: