Home /News /lifestyle /

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தும்மல் , சளி வர என்ன காரணம்..? மருத்துவர்கள் விளக்கம்!

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தும்மல் , சளி வர என்ன காரணம்..? மருத்துவர்கள் விளக்கம்!

கோவிட்-19 நோய்

கோவிட்-19 நோய்

கோவிட்-19 உருவான தொடக்க காலத்தில் தும்மல் ஒரு முக்கிய அறிகுறியாக இருந்தது. தற்போது இது பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.

கோவிட்-19 நோய்தொற்றை பரப்பும் புதிய ஓமிக்ரான் மாறுபாடுகளின் தீவிரத்தை குறைக்க, தற்போது அனைத்து இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்களிடையே இன்னும் தொற்றுநோய் உருவாகும் என்ற பயமும், ஒவ்வாமை போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்துகிறார்கள்.

ZOE மருத்துவ ஆய்வின்படி , லட்சக்கணக்கான பயனர்களிடமிருந்து தொற்றுநோய் தொடர்பான நுண்ணறிவுகளை, இங்கிலாந்தில் உள்ள App ஒன்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் COVID-19 சோதனையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் தும்மல் வருவதை கொரோனா தொற்றின் அறிகுறியாகப் புகாரளிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

தும்மல்:

கோவிட்-19 உருவான தொடக்க காலத்தில் தும்மல் ஒரு முக்கிய அறிகுறியாக இருந்தது. தற்போது இது பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது. நீங்கள் தடுப்பூசி போடப்பட்டதன் பிறகு, உங்களுக்கு அதிகமான தும்மல் ஏற்பட்டால் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம் என்று ZOE குழு அறிவுறுத்தியுள்ளது.

தும்மல் மற்றும் பிற அறிகுறிகள் இருந்தபோதிலும், நோயின் தீவிரம் குறைவான அளவில் உள்ளதால், விரைவாக குணமடைய வாய்ப்புள்ளதாக ZOE குழு தெரிவித்துள்ளது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து 100 சதவீத பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாவிட்டாலும், தடுப்பூசி போடுவது அவசியம் எனவும் கூறியுள்ளது.முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு உண்டாகும் வேறு சில அறிகுறிகள்:

தும்மல் தவிர, சளி, தலைவலி, தொண்டைப்புண் மற்றும் தொடர்ச்சியான இருமல் ஆகியவை முதல் நான்கு அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் ஓய்வெடுப்பது அவசியம். மேலும் நிறைய தண்ணீர் குடிப்பதோடு , ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்ண வேண்டும் மற்றும் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்வது போன்றவை தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்க உதவியாக இருக்கும்.

லாங் கோவிட் அறிகுறிகளை சமாளிக்க இந்த உணவுகள் உதவும் : நிபுணர்கள் பரிந்துரை

அறிகுறிகள் ஏன் ஒவ்வாமை போல் தோன்றுகிறது?

பெரும்பாலான தருணங்களில் வைரஸ் நாம் சுவாசிக்கும் போது, மூக்கு வழியாக நுழைகிறது. இந்த சமயங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய நோய் கிருமியின் தாக்கம் அதிகமாகும் வாய்ப்புள்ளதால் இந்த வைரஸ் உடலில் ஆழமாக ஊடுருவி, காய்ச்சலை உண்டாக்குவதோடு நுரையீரலில் கடுமையான வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால், உங்கள் நோய்எதிர்ப்பு திறன் வைரஸைக் கண்டறிந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும். இதனால் தான் அறிகுறிகள் வழக்கமான கோவிட்-19 அறிகுறிகளை காட்டிலும் ஒவ்வாமையை போல தோன்றுகிறது.Omicron BA.5 மாறுபாடு

தற்போது கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஓமிக்ரான் ஒரு வகைகளான BA.4 மற்றும் BA.5 காரணமாகும். இது தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகளால் ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த BA.4 மற்றும் BA.5 வகை, BA.2 போன்ற பிற சுழற்சி வகைகளை விட வேகமாக பரவும். இவை நோய்எதிர்ப்பு சக்தியை அழிப்பதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி நோய் தொற்றுகள் உண்டாவதை அதிகரிக்க வழிவகுக்கும்.

ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!

தடுப்பூசி போட்டாலும் கோவிட் தொற்று ஏன் ஏற்படுகிறது?

உயிருக்கு ஆபத்தான வைரஸிலிருந்து உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பதற்காகவும், இந்த நோயின் தீவிரத்தை குறைப்பதற்காகவும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தற்போதுள்ள அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் கடுமையான COVID-19 நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவை தொற்றுநோயை தடுப்பதில் 100 சதவீதம் பயனுள்ளதாக இருக்காது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்லது தகுந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்கள் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.ஓமிக்ரானுக்குப் பிறகு நீண்ட கோவிட் பெற முடியுமா?

கொரோனா வைரஸின் பதிப்பை விட ஓமிக்ரான் லேசான நோயை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஓமிக்ரான் உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தாக்குவதோடு மாரடைப்பு மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்புகள் தெரிவிக்கிறது

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cold, CoronaVirus Symptoms

அடுத்த செய்தி