Home /News /lifestyle /

Coronavirus : இனி மாஸ்க் கட்டாயம் அணியத் தேவையில்லை - நோய் கண்டறிதல் நிபுணர்கள் அறிக்கை

Coronavirus : இனி மாஸ்க் கட்டாயம் அணியத் தேவையில்லை - நோய் கண்டறிதல் நிபுணர்கள் அறிக்கை

மாஸ்க்

மாஸ்க்

இனி வரும் காலங்களில் மற்றொரு கொரோனா அலை உருவானது என்றால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தொற்றுநோய் ஆய்வு நிபுணர் லெட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைத் தொடர்ந்து, அதுகுறித்த அச்சங்கள் மெல்ல, மெல்ல விலகி வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக மாஸ்க் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், பல சந்தர்பங்களில் நமக்கு மயக்கமே கூட வந்திருக்கக் கூடும். தற்போது, பல்வேறு நாடுகளும் மாஸ்க் அணியும் விதியை கைவிட்டுள்ள நிலையில், நாமும் அதை பின்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாஸ்க் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வுகளை ஒருபக்கம் தொடர்வது அவசியம் என்றாலும், அதே சமயம், அதை கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை இப்போது கைவிடலாம். மேலும் ஒரு கொரோனா அலை வந்தது என்றால், மீண்டும் அதை அமல்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதுகுறித்து, நோய் கண்டறிதல், பொருளாதாரம் மற்றும் கொள்கை சார்ந்த வாஷிங்டன் மையத்தின் இயக்குநர் ரமணன் லெட்சுமிநாராயணன் கூறுகையில், “உலகின் பெரும்பாலான நாடுகள் மாஸ்க் கட்டாயம் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ளன. மாஸ்க் அணிவதால் பலருக்கு மயக்கமே ஏற்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

ஹரியாணாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியியல் துறை பேராசிரியர் கௌதம் மேனன் இதுகுறித்து கூறுகையில், “மூடிய அறைகளில் பலர் இருக்கும்போது மாஸ்க் அணிவதுதான் நல்லது என்று நான் வலியுறுத்துகிறேன். அதே சமயம், இதை கட்டாயமாக்க வேண்டியதில்லை’’ என்று கூறினார்.கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவு :

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாகக் குறைந்துள்ள நிலையில், மாஸ்க் கட்டாயமில்லை என்ற பரிந்துரையை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். அதேசமயம், மும்பையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

உணவருந்தும் போது நாம் செய்யும் தவறுகளும்... செய்ய வேண்டிய திருத்தங்களும்!

நாட்டிலேயே முதல் முறையாக பிரிஹன் மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ. என்ற வேரியண்ட் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று கடந்த புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. எனினும், கொரோனாவின் மரபு வடிவங்கள் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் INSACOG அமைப்பு, அந்த நபரின் உடல் மாதிரிகளை மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

பல மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமில்லை :

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுகள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.அதே சமயம், இனி வரும் காலங்களில் மற்றொரு கொரோனா அலை உருவானது என்றால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தொற்றுநோய் ஆய்வு நிபுணர் லெட்சுமிநாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாஸ்க் கட்டாயம் என்ற விதி நீண்ட காலத்திற்கு அமலில் இருந்தால் மக்கள் அதை உதாசீனப்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆகவே, தேவையற்ற சூழலில் மக்கள் அதை கைவிடவும், தேவை உள்ள சூழல்களில் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துவதும் அவசியமாகும்’’ என்றார் அவர்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் 5 முக்கிய உணவுகள் : என்னென்ன தெரியுமா..?

உலக சுகாதார மையம் கருத்து :

முன்னதாக பெருந்தொற்று காலம் நிறைவடைந்து விட்டதாக தவறான கருத்து நிலவுகிறது என்றும், மாஸ்க் கட்டாயம், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் தளர்த்தப்படுவதால் ஒமைக்ரான் பிஏ2 வேரியண்ட் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார மையம் கடந்த மார்ச் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Mask, CoronaVirus

அடுத்த செய்தி