ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை : இந்த அறிகுறிகளை உடனே கவனம் செலுத்துங்கள்..!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை : இந்த அறிகுறிகளை உடனே கவனம் செலுத்துங்கள்..!

கொரோனா

கொரோனா

தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும் ஒருவரை கொரோனா பாதிக்காது என்று 100 சதவீதம் சொல்ல முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்றது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

நாட்டில் பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்டுள்ளதால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டது என்று நம்பி வருகிறோம். இதற்கிடையே நாட்டின் ஒரு சில பகுதிகளை கடந்த சில நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

எனவே தொற்று முற்றிலும் மறைந்து விட்டதாக எண்ணி அலட்சியமாக இருக்காமல் முடிந்தவரை வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த கூடாது என்பதே நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை தவிர உரிய நேரத்தில் சிகிச்சை, விரைவில் மருத்துவ உதவி பெற தொற்றால் ஏற்படும் முக்கிய அறிகுறிகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.

கோவிட்டின் தற்போதைய நிலை:

டெல்டா வேரியன்ட்டை விட கொரோனா வைரஸின் ஒமைக்ரான் (Omicron) வேரியன்ட் தான் தற்போது பல நாடுகளில் காணப்படுகிறது. மேலும் Omicron-BA.1, BA.2 இன் சப்-வேரியன்ட்ஸ் மற்றும் XE என அறியப்படும் BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் ரீகாம்பினென்ட் உலகெங்கிலும் உள்ள மக்களை பாதித்து வருகிறது.

பொதுவான அறிகுறிகளை கவனிப்பது ஏன் முக்கியம்?

தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும் ஒருவரை கொரோனா பாதிக்காது என்று 100 சதவீதம் சொல்ல முடியாது. தொற்று தாக்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை குறைக்கவே பெரும்பாலும் தடுப்பூசிகள் உதவுகின்றனவே தவிர, முழுபாதுகாப்பை வழங்க அல்ல. எனவே தற்போதைய கொரோனா வேரியன்ட் ஏற்படுத்தும் பொதுவான சில முக்கிய அறிகுறிகளை தெரிந்து கொள்வது, பாதிக்கப்பட்ட நபர் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற, நோயிலிருந்து பாதிக்கப்பட்டவரை விரைவாக மீட்க உதவும். தவிர வயதானவர்கள், கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பிற வியாதிகள் உள்ளவர்கள் கோவிட் தொற்றின் முக்கிய அறிகுறிகளை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

கோவிட்டின் பொதுவான அறிகுறிகள்:

இருமல்:

கோவிட்டின் மிகவும் பொதுவான அறிகுறி இது. மற்ற இருமல்களிலிருந்து கோவிட் இருமல் வேறுபட்டது. கோவிட்டால் பாதிக்கப்பட்டவர் நீண்ட காலத்திற்கு வறட்டு இருமலை அனுபவிப்பார்.

மூக்கு ஒழுகுதல்:

மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு கோவிட்டின் பொதுவான அறிகுறியாகும். உங்களுக்கு திடீரென்று மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியக கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Coronavirus

அதிக சோர்வு:

இது கோவிடின் ஒரு தனித்துவ அறிகுறி. கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும் அதிகப்படியான சோர்வு ஏற்பட்டுள்ளது ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டை பிரச்சனை:

மூன்றாவது கோவிட் அலையின் போது பொதுவாக காணப்பட்ட அறிகுறி, தொண்டை புண். தொண்டை பகுதியில் அரிப்பு, எரிச்ச உணர்வு உள்ளிட்டவற்றை அதிகமாக உணர்வது சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாகும்.

தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து மட்டும்தான் கை கொடுக்குமா..? உண்மையை உடைக்கும் வல்லுநர்கள்

தலைவலி:

தலைவலி என்பது கோவிட்டின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். பொதுவான நமக்கு ஏற்படும் தலைவலிக்கு காரணம் நமக்கே தெரியும். காரணமே இல்லாமல் திடீரென தலைவலிப்பது, அதிகநாள் நீடிப்பது உள்ளிட்ட சிக்கலை எதிர்கொண்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

காய்ச்சல்:

நோய்க்கிருமி தாக்குதலுக்கு ஆளான உடலின் எதிர்வினையே காய்ச்சல் . உடலின் வெப்பநிலை 100 degree F-க்கு மேல் உயரும் போது, குறிப்பிட்ட நபர் நோய்வாய்ப்பட்டவராக கருதப்படுகிறார். காய்ச்சல் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

தசை வலி:

கோவிட்டின் மூன்றாவது அலையின் போது கடுமையான தசை மற்றும் உடல் வலியை பாதிக்கபட்ட பலரும் அனுபவித்தனர். ஆனால் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது இது பொதுவான அறிகுறியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் அபாயம் இன்னும் நீடிப்பதால் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, சோஷியல் டிஸ்டன்ஸ் கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, அறிகுறிகள் காணப்பட்டால் சுயமாக தனிமைப்படுத்தி கொள்வது உள்ளிட்டவற்றை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

First published:

Tags: Corona safety, Corona Symptoms, CoronaVirus