காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..

சிகிச்சை நடைமுறைகளின்போதும்,  மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது

காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..
கோப்பு படம்
  • Share this:
சிகிச்சை நடைமுறைகளின்போதும்,  மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது

தொடுதல் மூலமாக மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸானது தற்போது காற்றின் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதை 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்தனர். இதனை உலக சுகாதார அமைப்பும் ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சளி மற்றும் நீர்த்துளிகள் வழியாக கொரோனா பரவுவதால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் அவர்கள் மேற்பரப்புகளில் நீர்த்துளிகள் இருக்கக் கூடும் என்பதாலும் எங்கு கை வைத்தாலும் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.


இதற்கு முன் காற்றின் மூலம் பரவுதற்கான ஆதாரம் இல்லை என்று கூறிவந்த நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அறிக்கையை சமர்ப்பித்தையடுத்து அதை உறுதி செய்துள்ளது.இந்த விஞ்ஞானிகள் அதற்கான தகுந்த ஆதாரங்களையும் அந்த அறிக்கையோடு இணைத்துள்ளனர். எனவே அவற்றைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு மருத்துவ பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்தக் கோரியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு நெருக்கடியான சூழல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் அளித்த அந்த ஆதாரங்களில் வழிபாட்டு தளங்கள், மார்க்கெட், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என மக்கள் கூடும் இடங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. எனவே ஓரிடத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும் , மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் கருவிகள் , உபகரணங்கள் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதை எச்சரித்துள்ளது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading