கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை பிரச்னையா..? காரணங்களும்…அறிகுறிகளும் என்ன..?

தூக்கமின்மை

கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 • Share this:
  கொரோனா பாதிப்பு உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பலரை பாதிக்கிறது. குறிப்பாக தன்னைப் பற்றியும் தன் அன்புக்குறியவர்களைப் பற்றியுமான பயம் மற்றும் பதற்றமே அவர்களை பாதிக்கிறது. இதனால் அவர்கள் தூக்கமின்மை பிரச்னையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

  கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நீங்களும் பாதிகப்பட்டிருந்தால் அதன் அறிகுறி என்ன சிகிச்சை முறைகள் என்ன என்று பார்க்கலாம்.

  தூக்கமின்மை அறிகுறிகள் என்ன..?

  எவ்வளவுதான் புரண்டு புரண்டு படுத்தாலும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை எனில் நீங்கள் இன்சோம்னியா  ( Insomnia ) என்னும் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனையொடி நீங்கள் இன்னும் பல உடல்நலப் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் எழும்போது ஃபிரெஷான உணர்வு இருக்காது. இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, எரிச்சல், மனநிலையில் மாற்றம் போன்ற பிரச்னைகளை சந்திக்கக்கூடும்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்சோம்னியா வருகிறது..?

  COVID-லிருந்து மீண்ட பிறகு மக்கள் தூக்கமின்மையை எதிர்கொள்ள பல்வேறு காரணங்கள் உள்ளன. சில காரணங்கள் கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை. சிலர் தனிமையில் பல வாரங்கள் தனியாக தங்கியிருந்த காரணமாகவோ அல்லது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாலோ தூக்கமின்மையால் தூண்டப்படுகின்றன. இதனுடன், பகல்நேர ஓய்வு தூக்கம் இரவில் தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், நோயாளிகள் பகலில் நீண்ட தூக்கத்தை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

  கொரோனா செய்திகள் உங்களை மனப்பதற்றம் அடைய செய்கிறதா..? இனி இப்படி செய்யுங்கள்..!

  இன்சோம்னியா சிகிச்சை முறை என்ன..?

  COVID ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்குஅதன் பக்க விளைவுகளிலிருந்து மீள நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும் மற்றும் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

  வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில எளிய வழிகள் இங்கே உள்ளன, அவை உங்களுக்கு நிம்மதியாக உணரவும், நன்றாக தூங்கவும் உதவுலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

  தனிமையில் இருக்கும்போது செல்ஃபோனை அதிகம் பார்ப்பதை தவிருங்கள். செய்தி, சமூகவலைதளங்கள் பார்ப்பதை தவிருங்கள்.  தினம் தூங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் பின்பற்றினால் பின் தானாக அந்த நேரத்தில் தூக்கம் வரும்.

  கஃபைன் பானங்களை தவிர்ப்பது நல்லது. காஃபி அதிகம் குடித்தாலும் உங்கள் தூக்கம் தடைபடலாம்.

  தனிமையில் இருந்தாலும் அறையிலேயே உடற்பயிற்சி, யோகா செய்யுங்கள். இதனால் உடலுக்கு சுருசுருப்பு கிடைக்கும். தூக்கமும் தானாக வரும்.

  மன அமைதிக்கு தினம் 15 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். மூச்சுப்பயிற்சியும் மேற்கொள்ளுங்கள்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: