'O' குரூப் ரத்த வகையை கொண்டிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவாம்...!

'O' குரூப் ரத்த வகையை கொண்டிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவாம்...!

கோப்புப் படம்

அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, O இரத்த வகை உடையவர்கள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்படும் அபாயம் குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த ஆண்டு ஆரம்பித்த கோவிட் 19 தொற்று இன்னும் முடிந்தபாடில்லை. கொரோனா பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் கொரோனா பற்றிய புதுப்புது விஷயங்கள் தெரிய வருகின்றன. முதலில் காய்ச்சல், சளி இருமல் என்று கண்டறியப்பட்டது. பின்னர் அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா வரும் என்றும் கண்டறியப்பட்டது. இப்படி கொரோனா பற்றிய புதுப்புது செய்திகள் நம்மை குழப்பி வரும் நிலையில் ஆய்வாளர்கள் கொரோனா பற்றிய மற்றொரு கருத்தை முன் வைத்துள்ளனர். இந்த ஆய்வில் கோவிட்-19 ஒரு குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களை அதிகம் பாதிப்பதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 அபாயம் இரத்த வகையை பொருத்தது:

அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, O இரத்த வகை உடையவர்கள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்படும் அபாயம் குறைவு என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். சுமார் 7.5 லட்சம் கோவிட்-19 நோயாளிகள் சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆய்வில், அவர்களின் இரத்த மாதிரிகள் மற்றும் மரபணு வடிவமைப்பை மூன்று குழுக்களாகப் பிரித்து பரிசோதித்தனர். அப்பொழுது தான் O-பிளட் குரூப் உடையவர்களுக்கு 9-18% கோவிட் 19 வருவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்படும்:

நோயின் தீவிரம் மற்றும் பாதிப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளுக்கு, ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம் A வகை ரத்தம் உள்ளவர்களை கொரோனா தாக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன், உயிருக்கும் ஆபத்து நேரிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. A பாசிட்டிவ், A நெகட்டிவ், AB பாசிட்டிவ் மற்றும் AB நெகட்டிவ் ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு கொரோனா வைரசால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும், O வகையில் பாதிப்பு குறைவு என்றும் சீன ஆய்வாளர்களும் கண்டறிந்துள்ளனர். கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

எந்த ரத்த வகைக்கு ஆபத்து குறைவு:

அதே போல் O பிளட் குரூப் உடையவர்களுக்கு கோவிட் 19 வருவதற்கான வாய்ப்பு 13-26% குறைவாக இருந்தாலும், அதே நேரத்தில் AB இரத்த வகை உடையவர்கள் கோவிட் 19 ஆல் அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதே மாதிரி மற்றொரு ஸ்பானிஷ் ஆய்வில் B மற்றும் A இரத்த வகை கொண்டவர்களும் கோவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுவகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து இன்னும் நிறைய தகவல்களை ஆராய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு:

O அல்லது B இரத்தக் குழுக்களுடன் ஒப்பிடும்போது, A அல்லது AB இரத்தப்பிரிவை சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம், சி.ஆர்.ஆர்.டி மற்றும் ஐ.சி.யுவில் நீண்ட காலம் தங்குவதற்கான அதிக ஆபத்து உள்ளது. அவர்களுக்கு கொரோனாவால் அதிக நுரையீரல் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. "இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை உயிரியல் வழிமுறைகளை வரையறுக்க மேலும் ஆராய்ச்சி தேவை" என்று அது சிலர் கூறினர். இந்த இரண்டு ஆய்வுகள், A மற்றும் AB ஆகிய இரண்டு இரத்தப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா காரணமாக உறுப்பு செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இரத்த வகை O உள்ளவர்கள் உலகளாவிய ரத்த நன்கொடையாளர்கள் - அவர்கள் தங்கள் இரத்தத்தை அனைத்து பிரிவு ரத்த குழுக்களுக்கும் தானம் செய்யலாம். இருப்பினும், அவர்கள் O வகை இரத்தத்தை மட்டுமே பெற முடியும். இரத்த வகை O பிரிவு உடையவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைவு என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்றெல்லாம் தெரியவில்லை.

சீன ஆய்வு:

முன்னதாக ஒரு சீன ஆய்வில், O இரத்த வகைக்கும் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்பட்டது. அதில் A வகை இரத்தப் பிரிவு உள்ளவர்கள் மற்ற இரத்த பிரிவினர்களைக் காட்டிலும் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். இந்த ஆய்வானது சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இருந்து வந்ததாகும்.

Also read... மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த தற்காலிக குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்களா? என்ன காரணம்?

நினைவில் கொள்ள வேண்டியவை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு இன்னும் முடிவுக்கு வராத ஒன்று. எனவே நீங்கள் O வகை இரத்த பிரிவினராக இருந்தால், முழுமையாக சந்தோஷப்படாதீர்கள். அதேப் போல் AB வகை இரத்த பிரிவினர் விரக்தி அடைய வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளுடன் உடன்படாத சில விஞ்ஞானிகள், ‘COVID-19 மற்றும் ABO இரத்தக் குழு ஆன்டிஜென்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்தாமல், இந்த முடிவைப் புரிந்து கொள்வது கடினம். இது முற்றிலும் தற்செயலானதாக இருக்கலாம்' என்று கூறுகிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட இரத்த குழுவின் பரவலும் முக்கியமானது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆராயவில்லை. இருப்பினும், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை சரிபார்ப்பது புதிய வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண ஓரளவு உதவும் என்று அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: