முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Black Fungus : கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு வருமா?

Black Fungus : கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு வருமா?

முகத்தில் வீக்கம், வலி, பார்வைக் குறைபாடு, பார்வை தெளிவாக இருந்தாலோ, மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

முகத்தில் வீக்கம், வலி, பார்வைக் குறைபாடு, பார்வை தெளிவாக இருந்தாலோ, மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

முகத்தில் வீக்கம், வலி, பார்வைக் குறைபாடு, பார்வை தெளிவாக இருந்தாலோ, மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

  • Last Updated :

ஒரு பக்கம் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு மேல் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி 236 கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், மூக்கடைப்பு பாதிப்புகள் இருந்தால் தங்களை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும் முகத்தில் வீக்கம், வலி, பார்வைக் குறைபாடு, பார்வை தெளிவாக இருந்தாலோ, மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. காற்றில் பூஞ்சைகள் பரவியிருக்கும், அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும். நாம் சுவாசிக்கும் போது மூக்கின் திசுக்களை பாதிக்குமாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பாதிக்குமாம். ஆரோக்கியமாக இருப்பவர்களை பாதிக்காது.

வீட்டிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டரை எவ்வாறு செட் செய்வது? புதிய App அறிமுகம்!

எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம். அவசியம் இன்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். மூக்கில் உள்ள சைனைஸை பாதிக்கக் கூடியது. கண், மூளையை பாதிக்கக் கூடியதாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக இருப்பதும், முகக் கவசம் அணிவதும் நம்மை இந்த நோயில் இருந்து பாதுகாக்கும்.

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கெல்லாம் எற்படும் கொரோனா பாதிக்காதவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுமா என்று பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே உள்ளன. கருப்பு பூஞ்சை பாதிப்பு மியூகோர்மைசிட்ஸ் (Mucormycetes) என்ற ஒருவகை பூஞ்சையால் ஏற்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே தோன்றும். குறிப்பாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கும், தீவிர கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகமாக ஸ்டீராய்டு பயன்படுத்தும் போதும் இது ஏற்படுகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படாத சிலருக்கு கருப்புப் பூஞ்சை ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ? - மருத்துவர்கள் சொல்லும் குட் நியூஸ்!

சுற்றுச்சூழலில் குறிப்பாக மணற்பரப்புகளில், இலை, மரக்கட்டைகளில் இந்த கருப்பு பூஞ்சை காணப்படும். ஆனால் இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே பாதிக்கும். ஆரோக்கியமானவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றாலும் அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 300 மில்லிகிராம்ஸ் பெர் டிக்லிட்டர் (mg/dL). இதன் மூலம் நம் உடல் பிளட் ஆசிட்டை (Ketones) சுரக்கும். இந்த நிலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கும். நிம்மோனியா, அல்லது கொரோனா பாதிப்பு தீவிரமாக பாதிக்கையில் அவர்களுக்கு ஸ்டீராய்டுகளை அளிக்கும் போதும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதனால் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பரிசோதனையும் சேர்த்து செய்து கொள்ளலாமா என்ற கேள்வி இருக்கிறது. கொரோனா வைரஸ் மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்பு இரண்டும் ஒரே நேரத்தில் வராது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்களுக்கு நோயாளிகள் கருப்பு பூஞ்சை

First published:

Tags: Black Fungus, Covid-19