• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Corona : கோவிட்-19 வைரஸ் மனித மூளை செல்களை பாதிக்காது .. ஆய்வில் புதிய தகவல்

Corona : கோவிட்-19 வைரஸ் மனித மூளை செல்களை பாதிக்காது .. ஆய்வில் புதிய தகவல்

காட்சி படம்

காட்சி படம்

Corona virus : ஆல்ஃபாக்டரி செயலிழப்பு அனைத்து கோவிட்-19 நோயாளிகளையும் பாதிப்பதில்லை.

  • Share this:
கோவிட்-19 வைரஸ் மனித மூளை செல்களைப் பாதிக்காது என்றும், கோவிட் தொடர்பான வாசனை உணர்வுக்கு ஏற்படும் சேதம் முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கலாம் என்றும் சமீபத்திய தெரியவந்துள்ளது. அறிவியல் பத்திரிக்கையான ‘செல்’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கிறது. அதில் வாசனை உணர்வுகளைத் தொடங்குவதற்கு பொறுப்பான ‘ஆல்ஃபாக்டரி’ சென்சார் நியூரான்களை( OSN) இவை பாதிப்பதில்லை.

சஸ்டென்டாகுலர் (Sustentacular) செல்களை பாதிக்கிறது என்பதையே காட்டுகிறது இந்த ஆய்வு முடிவுகள். அதாவது, மூக்கின் மேல் இடைவெளிகளை வரிசைப்படுத்தும் மென்படலத்தில் உள்ள நியூரான்களை கோவிட் வைரஸ் பாதிக்கிறது என்பது முந்தைய ஆராய்ச்சி முடிவாகும். ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்களை கொண்ட ஆல்ஃபாக்டரி மியூகோசா என்று அழைக்கப்படும் இந்த சவ்வு, வைரஸ் உள்ளிழுக்கப்படும் போது முதலில் இறங்குகிறது.

ஆல்ஃபாக்டரி செயலிழப்பு அனைத்து கோவிட்-19 நோயாளிகளையும் பாதிப்பதில்லை. சிலரை மட்டுமே பாதிக்கிறது. அவற்றில் 10ல் ஒருவருக்கு வாசனை இழப்பு அதாவது வாசனை உணர்வு இல்லாமல் இருப்பது குறுகிய காலத்துக்கோ, நீண்ட காலத்துக்கோ அல்லது ஒருவேளை நிரந்தரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் சஸ்டென்டாகுலர் (Sustentacular) செல்களை மட்டுமே பாதித்தால், சேதம் குறைவாகவும், நீண்ட காலமும் நீடிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

ஃபிராங்ஃபர்ட்டில் உள்ள நியூரோஜெனெடிக்ஸ்க்கான மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் பீட்டர் மொம்பேர்ட்ஸின் கூற்றுப்படி, ‘ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்கள் பாதிக்கப்படாவிட்டாலும் கூட, அவை உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை சமமான நிலைக்குக் கீழே செயல்படலாம் அல்லது சஸ்டென்டாகுலர் செல்கள் மீளுருவாக்கம் செய்யும் வரை செயல்படுவதை முற்றிலுமாக நிறுத்தலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வுக்காக, கோவிட்-19 நோயாளிகள் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் ஆல்ஃபாக்டரி மியூகோசா மற்றும் பல்பில் இருந்து திசுக்களை மண்டை ஓட்டில் இருந்து எடுத்தனர். இதனை செய்வதற்காக அறுவை சிகிச்சை குழு ஒன்றினை ஏற்படுத்தினார்கள். அதில் 30 நோயாளிகளில், வைரஸ் இன்னும் இருப்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்தனர். அதாவது நோயின் கடுமையான, தொற்று கட்டத்தில் நோயாளிகள் இறந்துவிட்டனர் இந்த நோயாளிகள்.

also read : சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..

‘எந்தவொரு ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்களும் சேதமடைந்ததாகவோ அல்லது அவற்றில் குறைவானவையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்கு அருகில் உள்ள ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்கள் பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்கு அருகில் இல்லாதவற்றிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதாகவோ காட்டப்படவில்லை’ என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றது’ என்று கூறினார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் ஸ்டூவர்ட் ஃபயர்ஸ்டீன்

30 நோயாளிகளில் 6 பேரில் மட்டுமே, ஆல்ஃபாக்டரி மியூகோசா வைரஸ் கண்டறியப்பட்டது. நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் டெபி வான் ரியல் கூறுகையில், ‘ஒட்டுமொத்தமாக எந்த வலுவான முடிவுகளையும் எடுக்க எண்கள் மிகவும் குறைவாக உள்ளன. குறிப்பாக ஆய்வானது குறைந்த நபர்களை வைத்தே எடுக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவின்படி, ‘கோவிட் தொடர்பான வாசனை இழப்பை அனுபவிக்கும் நபர்கள், தங்கள் மூளையில் வைரஸ் தாக்கவில்லை என்பதையும், எதிர்காலத்தில் ஆய்வு செய்யப்படாத சஸ்டென்டாகுலர் செல்களை இலக்காகக் கொண்ட சிகிச்சைகள் வைத்து அவர்களை குணப்படுத்த முடியும் என்பதையும் உறுதி செய்கிறது’ என்று கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: