முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் முடி உதிர்வு அதிகரிக்க கொரோனா பரவல் மன அழுத்தம்தான் காரணம் - ஆய்வில் புதிய தகவல்!

உங்கள் முடி உதிர்வு அதிகரிக்க கொரோனா பரவல் மன அழுத்தம்தான் காரணம் - ஆய்வில் புதிய தகவல்!

முடி உதிர்வு

முடி உதிர்வு

நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து இழப்பு உடலில் எதிர்பாராத மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முடி செல்கள் வலுவிழந்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒன்றரை வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டு அலைகள் மக்களை பாடாய்படுத்தி உள்ள நிலையில் தற்போது செப்டம்பர், ஆக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை வந்துவிடும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா தடுப்பூசிகள் வந்துவிட்டாலும், பெரும்பாலானோர் தற்போது வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். ஏற்கனவே உள்ள முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால் பலரது மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைரஸுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை தற்போது இருந்தாலும், புதிய ஆய்வில் கோவிட்-19 தொடர்பான மன அழுத்தம் நம் தலைமுடி உதிர்விற்கு காரணமாக இருக்கிறது என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மூளை போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும். இதனால் நமது ஆரோக்கியம் கவலை அளிக்கும் வகையில் மாறுகிறது. மன அழுத்தம் மற்றும் வைரஸ் பரவல் பயம், அன்புக்குரியவர்களை இழத்தல், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பது, வேலை குறித்த அச்சம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம், கவலை மற்றும் மனநலக் கோளாறுகள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலை மோசமடைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்படுகிறது

என்பதை தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் சுட்டி காட்டியுள்ளன.

எனினும் ஒருவர் மன அழுத்தத்தின் அளவை துல்லியமாக தீர்மானிக்க எந்த ஒரு வழியும் இல்லை என்றாலும், தற்போது நடைபெற்ற புதிய ஆய்வில் நம் தலைமுடியில் இருக்கும் ஹார்மோன்கள் கோவிட் -19 மன அழுத்தம் எவ்வளவு தீவிரமாக உயர்ந்துள்ளது என்பதை நாம் அறியக்கூடிய ஒரு வழியாகும் என்று கண்டறிந்துள்ளது.

பொலிவான முகத்திற்கு வீட்டிலேயே இப்படி சீரம் செய்து பயன்படுத்துங்கள்..

ஆய்வுகள் கண்டறிந்த தகவல் :

கார்டிசோல் என்ற ஒரு முக்கிய ஹார்மோன் மோசமான மன ஆரோக்கியத்தை அடையாளம் காட்டும். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்து அபுதாபி (NYUAD), அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில், ஒருவரின் தலைமுடியில் காணப்படும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவை வைத்து மன அழுத்த அளவை தீர்மானிக்க முடியும், மேலும் தொற்றுநோய்களின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிக பாதிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தான்.

இந்த ஆய்வில் ஜோர்டான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 52 குடும்பங்களில் நடத்தப்பட்ட கார்டிசோல் சோதனைகளை ஒப்பிட்டது, இதில் மன அழுத்த அளவுகளில் கணிசமான அதிகரிப்பு ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையில் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் அதிக மன அழுத்தம் நீண்ட கால விளைவுகளாக வெளிப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.

COVID - 19 முடி உதிர்வை ஏற்படுத்துமா?

விஞ்ஞானிகள் மன அழுத்தம், கார்டிசோல் அளவு அதிகரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய தொடர்பை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்றாலும், கோவிட் பரவல் விளைவாக முடி உதிர்தல் என்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அறிகுறி என்று கணித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து இழப்பு உடலில் எதிர்பாராத மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முடி செல்கள் வலுவிழந்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக கோவிட் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் முடி உதிர்தலின் தீவிரத்தை மோசமாக்கும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

ஆய்வுகள் நடத்தும் விஞ்ஞானிகள் குடும்ப நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்த கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாலும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை நாம் ஆரம்பத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். இது நம்மை மனரீதியாக பாதிப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலவீனப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதித்து, உடலை மோசமாக்கும். எனவே, மன அழுத்தம் மற்றும் கவலையை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். அவ்வாறு செய்ய சில வழிகள் இங்கே:

* தியானம் மற்றும் சுவாச பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

* உடலில் சுறுசுறுப்பாக வைத்திருங்கள், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யவும் நேரம் ஒதுக்குங்கள்.

* உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

* கொரோனா தொற்று பரவல் குறித்து அச்சம் கொள்ளாதீர்கள்.

* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* உங்களுக்கு பிடித்த அதாவது செடி வளர்ப்பது, செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது, இசை கேட்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

First published:

Tags: CoronaVirus, Hair care, Hair Damage, Hair fall, Stress