கொரோனா தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் - திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ்

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசிகள் பற்றாக்குறை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஊசி போட்டுக் கொள்ள வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

  இந்நிலையில் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன என்று தமிழக அரசு கூறினாலும், சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்காக சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்படுவது மருந்தின் பற்றாக்குறையை உறுதி செய்கிறது.

  அரசு மருத்துவமனைகளில் நிகழும் இந்த பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கேயும் தடுப்பூசியின் விலை எளிய மக்களால் வாங்க முடியாத உச்சத்தில் விற்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதைப் பெறுவது அவர்களின் உரிமை, எனவே அரசாங்கம் தடுப்பூசியின் பற்றாக்குறையைப் போக்கவும், தனியார் மருத்துவமனையில் தடுப்பூசியின் விலையை குறைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: