கொரோனா தடுப்பூசியால் பெண்களின் மாதவிடாயில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. கோவிட்-19 தடுப்பூசி காரணமாக, மாதவிடாய் காலங்களில் பெண்கள் அவ்வப்போது சில மாற்றங்களை அனுபவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை.
இப்போது லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களின் மாதவிடாய் காலத்தில் சில மாற்றங்கள் இருப்பதாகத் ஆய்வில் கூறியுள்ளனர், ஆனால் இந்த மாற்றங்கள் தற்காலிகமானவைதான் என்றும் கூறியுள்ளனர். சில நாட்களிலேயே மாதவிடாய் சாதாரணமாக நடக்கத் தொடங்கும். தடுப்பூசியால் மாதவிடாய் பாதிக்கப்பட்டாலும் அது சீக்கிரமே சரியாகிவிடும் என்கிறனர்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் ஒரு கட்டுரையில், டாக்டர் விக்டோரியா மாலே, அமெரிக்க மாதவிடாய் கண்காணிப்பு பயன்பாட்டில் கண்டறியப்பட்ட இரண்டு ஆய்வுகளை சுட்டிக்காட்டுகிறார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு, சுமார் 4,000 பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் இரண்டு மாதவிடாய் அனுபவித்ததாக மேற்கோள் காட்டுகிறார். சிலருக்குஒரு நாள் தாமதமாக மாதவிடாய் தள்ளிப்போயுள்ளது. ஆனால் அதன் பிறகு இரண்டாவது காலகட்டத்தில் எல்லாம் இயல்பாகி, சரியான நேரத்தில் பீரியட்ஸ் வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு அடுத்த மாதவிடாயில் இரண்டு நாட்கள் தாமதமாக வந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் மாலே கூறுகையில், இதுபோன்ற வழக்குகள் நடக்கலாம். ஆனால் பிரிட்டனில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான இடைவெளி 8 வாரங்கள். தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 10 பெண்களில் ஒருவருக்கு, மாதவிடாய் காலம் 8 நாட்கள் அதிகரித்துள்ளது. ஆனால் இரண்டு மாத மாதவிடாய்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த 5 அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்கள் : இது நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம்...
இதுபோல் மற்றொரு ஆய்வு நார்வேயிலும் செய்யப்பட்டது. இதில் 5600 பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பெண்களில் 40 சதவீதத்தினரின் மாதவிடாய் மாற்றங்கள் தடுப்பூசி எடுப்பதற்கு முன்பே காணப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பல பெண்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு முன்பை விட அதிகமான இரத்தப்போக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு மாதவிடாய் காலத்தில் சிறிய மாற்றங்கள் சாத்தியமாகும். ஆனால் பெண்ணின் உடல் எல்லாவற்றையும் இயற்கையான முறையில் இயல்பாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் மாலே பேசியுள்ளார்.
பெண்களின் கருவுறுதல் பாதிக்கப்படாது
ஆய்வில், தடுப்பூசி கருத்தரிப்பை பாதிக்கிறது என்பது முட்டாள்தனம் என்று கூறப்பட்டுள்ளது. தடுப்பூசிக்குப் பிறகு, பெண்களின் மலட்டுத்தன்மை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று டாக்டர் விக்டோரியா மாலே கூறியுள்ளார். தடுப்பூசி போட்ட பிறகு பெண்கள் குழந்தை பெற முடியாது என்று கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் பாதிக்கப்படலாம் என்று டாக்டர் மாலே கூறினார்.
இதற்கு இன்னும் ஆய்வு தேவை என்றாலும், தடுப்பூசி பெண்களின் கருவுறுதலை பாதிக்காது. மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகியவையே எங்கள் ஆய்வின் முதன்மை தேடலாக இருந்தது என்று டாக்டர் மாலே கூறினார். இதனால்தான் இது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளைப் பெறுவதற்கு இவ்வளவு காலம் எடுத்தது என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Irregular periods, Periods, Women Health