Home /News /lifestyle /

கொரோனா அலெர்ட் : உடல் சோர்வாக உணர்ந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

கொரோனா அலெர்ட் : உடல் சோர்வாக உணர்ந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

கொரோனா

கொரோனா

சளி, இருமல் தானே என அசாதாரணமாக இருக்காதீர்கள். நீங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்காதீர்கள். அருகில் இருக்கும் கிளீனிக்குகளுக்கும் செல்லாதீர்கள். உடனே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள்.

    கோவிட்-19 என்பது உலகை அச்சுறுத்தும் கொடிய தொற்று என உலக சுகாதார அமைப்பே அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் 1,45000 மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளும் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடித்து வருகின்றனர். இந்தியாவையும் வெகுவாகத் தாக்கி வரும் கொரோனா இந்திய மக்களையும் அச்சப்பட வைத்துள்ளது. இதற்கு வறட்டு இருமல், காய்ச்சலே முதல் அறிகுறி என்பதால் சாதாரண உடல் உபாதைகள் என்றாலும் பீதியடைய வைத்துள்ளது. எனவே அவ்வாறு உடல் நலம் குறைவாக உணர்ந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    அறிகுறிகள் : இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி , படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியாத நிலை போன்ற அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். எதுவாக இருந்தாலும் இந்த நோய்தான் என மருத்துவர் உறுதி செய்யாமல் பயப்பட வேண்டாம்.

    வீட்டிலேயே இருங்கள் : மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால் முதலில் எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டிலேயே இருங்கள். வீட்டிலும் உங்களுக்கான படுக்கை அறையிலேயே ஓய்வு எடுங்கள்.

    மருத்துவரை அழையுங்கள் : அறிகுறிகள் அனைத்தும் இருப்பின் உடனே மருத்துவ உதவி அவசர எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.



    சளி, இருமல் தானே என அசாதாரணமாக இருக்காதீர்கள். நீங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்காதீர்கள். அருகில் இருக்கும் கிளீனிக்குகளுக்கும் செல்லாதீர்கள். உடனே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள். உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    வெளியே சென்றால் , குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

    வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கிறீர்கள் எனில் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் நலம் குறைவாக இருந்தால் செல்லப்பிராணிகளின் அருகில் செல்லாதீர்கள்.
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி