திறந்தவெளியில் கொரோனா பரவல் அரிதானது என்றாலும் முகக்கவசம் கட்டாயம் : நிபுணர்கள் வலியுறுத்தல்..

வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உள்ளே இருப்பதை விட வெளியே மிகவும் குறைவாக உள்ளது, ஏனெனில் காற்றில் வெளியாகும் வைரஸ்கள் வளிமண்டலத்தின் மூலம் விரைவாக நீர்த்துப்போகக்கூடும்.

திறந்தவெளியில் கொரோனா பரவல் அரிதானது என்றாலும் முகக்கவசம் கட்டாயம் : நிபுணர்கள் வலியுறுத்தல்..
மாஸ்க்
  • Share this:
ஏறக்குறைய அனைத்து ஆவணப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிமாற்றங்களும் அடைப்பட்ட வீட்டு, அலுவலக சூழலில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளன. ஆனால் இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், வெளியில் முகமூடி அணிவது நியாயமானது தான். ஏனெனில் தொற்று ஏற்படும் அபாயம் இன்னும் உள்ளது என்று தெரிவித்தனர். கட்சிகள் அல்லது தேர்தல் பிரச்சார பேரணிகள் போன்ற நீண்ட நேரம் பேசும் நிகழ்வுகளில் மக்கள் ஒருவருக்கொருவர் அருகில் நிற்கும் போது வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என கூறுகின்றனர். ஏனெனில் அவை,

1. தொடர்புடைய அபாயம்

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, உணவகங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மாநாடுகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் ஏற்பட்ட நோய் தொற்று பரவல் நிகழ்வுகளை பல ஆய்வுகள் விவரித்தன. இது குறித்து சுமார் 7,000-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இரண்டு சீன கிராமவாசிகளுக்கு இடையில், திறந்த வெளியில் வைரஸ் பரவிய ஒரு வழக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டது.


அதேபோல, 25,000 வழக்குகளின் பகுப்பாய்வில், ஆறு சதவீத வழக்குகள் விளையாட்டு நிகழ்வுகள் அல்லது இசை நிகழ்ச்சிகள் போன்ற வெளிப்புற நிகழ்ச்சி சூழல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த பரவல் சமூக தொலைவு கவனிக்கப்படாத இடத்தில், அல்லது மக்கள் சிறிது நேரம் தங்கியிருந்த இடத்தில், சுற்றி நகர்ந்து சத்தமாக பேசுவது அல்லது பாடும் நிகழ்வுகளை கொண்ட மூடப்பட்ட பகுதிகளில் நடந்துள்ளன.இருப்பினும், அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழு இது குறித்து கூறுகையில், "ஒரே மாதிரியான செயல்பாடு மற்றும் தூரத்திற்கு உட்புறங்களை விட வெளிப்புறங்கள் மிகவும் பாதுகாப்பானவை" என்று தரவு சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்தனர்.2. காற்றுமண்டலம் வழியாக நீக்கம்

வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உள்ளே இருப்பதை விட வெளியே மிகவும் குறைவாக உள்ளது, ஏனெனில் காற்றில் வெளியாகும் வைரஸ்கள் வளிமண்டலத்தின் மூலம் விரைவாக நீர்த்துப்போகக்கூடும் என்று அந்தக் குழு விளக்கமளித்தது. மேலும், வைரஸ் சுமந்து செல்லும் "ஏரோசோல்களை" சிகரெட் புகைக்கு அவர்கள் ஒப்பிட்டுள்ளனர். பிப்ரவரி முதல் பல ஆய்வுகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், சுவாசம், பேசுதல் மற்றும் பாடுவதன் மூலம் நாம் வெளியிடும் நுண்ணிய துளிகள் (ஏரோசோல்கள்), கண்ணுக்கு தெரியாத மேகங்களால் வான்வழியில் பரவுவதற்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தும் கொரோனா குறித்து கவலைப்படும் பெண்கள்... ஏன் தெரியமா?

அதுவே, ஒருவர் இருமல் அல்லது தும்முவதால் வெளியேறும் பெரிய நீர்த்துளிகள் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் (ஆறு அடி வரை) சுற்றளவில் இருக்கும் வேறு ஒருவரின் முகத்தில் நேரடியாக இறங்கக்கூடும் எனவும் கண்டறியப்பட்டது. ஒரு பகுதியின் காற்றோட்டத்தைப் பொறுத்து மிகச்சிறிய நீர்த்துளிகள் நிமிடங்கள் அல்லது ஒரு மணிநேரம் காற்றில் மிதக்கின்றன. அவ்வாறு, மோசமாக காற்றோட்டம் உள்ள ஒரு அறையில், காற்று சுழற்சி இல்லாத இரண்டு கட்டிடங்களுக்கு இடையில், இந்த நீர்த்துளிகள் குவிந்து இருந்தால் ஒரு வழிப்போக்கரால் அவை சுவாசிக்கப்படலாம்.தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் துகள்களின் சரியான அளவு குறித்து தெரியவில்லை. ஆனால் பெரிய அளவிலான துகள்கள், நோய்த்தொற்றின் வீரியத்தை அதிகமாக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக மரபியலாளரும் வைரஸ்களில் நிபுணருமான ஸ்டீவ் எலெட்ஜ் என்பவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், " இது சாத்தியமற்றது என்றாலும், மக்கள் வெளியில் நடந்து செல்லும்போது ஒருவருக்கொருவர் கொரோனா வைரஸை பரப்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று விஞ்ஞானிகள் குழு முடிவு செய்தது.

முன்னெச்சரிக்கை வழிமுறைகள்:

"முககவசத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உலகளாவிய உடன்படிக்கை இருப்பது உண்மையில் பாதுகாப்பான உத்தி" என்று யேல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் கிறிஸ்டல் பொலிட் கூறியுள்ளார். ஒரு நடைபாதையில் அல்லது ஒரு பூங்காவில் சரியான ஆபத்தை கணக்கிட பல மாறிகள் உள்ளன.

இது காற்று மற்றும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். அதேசமயம் வைரஸ் பரவல் சூரியனையும் சார்ந்துள்ளது. ஏனெனில் புற ஊதா கதிர்கள் வைரஸை செயலிழக்கச் செய்கின்றன. ஆனால் அவை அவ்வாறு செய்யும் வேகம் சூரியனின் தீவிரத்தைப் பொறுத்தது. எனவே, பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை, எளிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருப்பது மிகவும் திறமையானது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

 

 
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading