Home /News /lifestyle /

கருத்தடை சாதனங்கள் சில நேரங்களில் கை கொடுக்காமல் போவது ஏன்..? இதுதான் காரணம்..!

கருத்தடை சாதனங்கள் சில நேரங்களில் கை கொடுக்காமல் போவது ஏன்..? இதுதான் காரணம்..!

கருத்தடை சாதனங்கள்

கருத்தடை சாதனங்கள்

எந்தவொரு முறையும் சிறப்பானது என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு முறையும் மற்றொன்றோடு ஒப்பிடுகையில் வேறுபடுகிறது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எது பலன் அளிக்கிறது என்பதை கண்டறிந்து அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடலுறவு என்பது வெறுமனே இனப்பெருக்கம் செய்வதற்கானது மட்டுமல்ல. ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மகிழ்ச்சி அடைவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். ஆக, பெரும்பாலான சமயங்களில் குழந்தை உண்டாகாமல் இன்புற்று இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு ஆணும், பெண்ணும் இணை சேருகின்றனர்.

அதே சமயம், கரு உண்டாகுவது இயற்கையானது என்னும் நிலையில், செயற்கையான முயற்சிகளின் மூலமாக அதைத் தடுக்க பல நடவடிக்கைகளை நாம் கையாளுகிறோம். ஆண், பெண் என இரு பாலருமே ஏதோ ஒரு வகையில் கருத்தடுப்பு முறைகளை கையாளலாம்.

செக்ஸ் உறவில் ஈடுபடும் ஒரு ஆண், ஆணுறை பயன்படுத்துகையில் அது பாதுகாப்பான செக்ஸ் உறவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற கர்ப்பங்களை தவிர்க்க உதவுகிறது. இதேபோல பெண்களும் பெண்ணுறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், பெரும்பாலான பெண்கள் கருத்தடுப்பு மாத்திரைகளை உபயோகம் செய்கின்றனர். இது தவிர காப்பர்-டி என்னும் சாதனத்தை பயன்படுத்தியும் கருத்தடுப்பு முயற்சியை மேற்கொள்ளலாம்.

100 சதவீத பலனுக்கு உத்தரவாதம் கிடையாது :

கருத்தடுப்புக்கு பல முறைகளை நாம் கையாளுகிறோம் என்றாலும், அதில் 100 சதவீத பலன் கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, கருத்தடுப்பு முயற்சியை மேற்கொள்ளும் 100 ஜோடிகளில் குறைந்தபட்சம் இருவர் கர்ப்பம் அடைந்து விடுகின்றனர்.



ஏன் கருத்தடுப்பு முறை தோல்வி அடைகிறது?

பெரும்பாலும் மனிதத் தவறுகள் காரணமாகவே கருத்தடுப்பு முறை தோல்வி அடைகிறது. கருத்தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இல்லை என்பதால் பெரும்பாலானோர் அதைப் பயன்படுத்த தவறுகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர்.

குறட்டை விடுவது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறதா..? நிபுணர்களின் விளக்கம்

ஒருமுறைக்கு மேலாக கருத்தடுப்பு மாத்திரியை எடுத்துக் கொள்ள மறக்கும் பெண்ணாக நீங்கள் இருப்பின், கருத்தடுப்பு சாதனத்தை பொருத்திக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சில சமயங்களில் கருத்தடுப்பு மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள், அதை முறைப்படி எடுத்துக் கொள்ள தவறுகின்றனர். சரியான நேரத்திற்கு உட்கொள்ளவில்லை என்றால் அது பலன் தராது.

சில சமயங்களில் ஆன்டிபயோடிக், சர்க்கரை கட்டுப்பாடு, இயற்கையான மூலிகைகள் என வேறுபல நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்ளும்போது அது கருத்தடுப்பு மாத்திரைகளின் செயல்பாட்டை குறைத்துவிடுகிறது.



ஆணுறை பயன்பாடு மிக எளிமையானது என்ற வகையில் நிறைய பேர் அதை தேர்வு செய்கின்றனர். ஆனால், சில சமயங்களில் ஆணுறை சேதமடைந்து விடுகிறது அல்லது அதை அப்புறப்படுத்தும் போது கவனமாக இருப்பதில்லை.

சிறந்த கருத்தடுப்பு முறை எது?

எந்தவொரு முறையும் சிறப்பானது என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு முறையும் மற்றொன்றோடு ஒப்பிடுகையில் வேறுபடுகிறது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எது பலன் அளிக்கிறது என்பதை கண்டறிந்து அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிராய்லர் கோழிகளின் ஆபத்து... புற்றுநோய்க்கு வழி வகுக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

முயற்சி தோல்வி அடைந்தால்

கர்ப்பத்தை கண்டறியும் கருவியை வாங்கி வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம். அவசரகால கருக்கலைப்பு முறைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Contraceptive, Contraceptive Pills

அடுத்த செய்தி