Home /News /lifestyle /

தீவிர தொற்றின் போது அதிகரித்த ஆல்கஹால் நுகர்வு… கல்லீரல் பாதிப்பு , இறப்பை அதிகரித்துள்ளதாக தகவல்

தீவிர தொற்றின் போது அதிகரித்த ஆல்கஹால் நுகர்வு… கல்லீரல் பாதிப்பு , இறப்பை அதிகரித்துள்ளதாக தகவல்

மது பழக்கம் | கல்லீரல்

மது பழக்கம் | கல்லீரல்

கோவிட்-19 தொற்றால் குறுகிய காலத்தில் மது அருந்தும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வரும் 2023-ஆம் ஆண்டளவில் 100 கூடுதல் இறப்புகளையும் 2,800 கூடுதல் கல்லீரல் செயலிழப்பு நிகழ்வுகளையும் ஏற்படுத்தும்

கோவிட்-19 தொற்று நோய்களின் போது அதிகரித்த ஆல்கஹால் நுகர்வு காரணமாக கல்லீரல் நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்புகளின் விகிதங்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது சமீபத்திய ஆய்வு மூலம் கணித்துள்ளனர். கோவிட்-19 தொற்றுகளின் போது மது அருந்துவதால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கல்லீரல் நோய்கள் அதிகரித்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்களால் கவனிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு முடிவு ஹெபடாலஜி ஜர்னல் (Hepatology Journal) என்ற இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பானஆய்வில் ஈடுபட்ட Massachusetts General Hospital-லின் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு, அமெரிக்காவில் வயது வந்தவர்களின் குடிப்பழக்கம் குறித்த தேசிய கணக்கெடுப்பின் டேட்டாவை ஆய்வுக்காக பயன்படுத்தியது. அதில் கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் சுமார் அதிகப்படியான குடிப்பழக்கம் சுமார் 21% வரை அதிகரித்து உள்ளது தெரிய வந்தது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் அனைத்து அமெரிக்க அடல்ட்ஸ்களிடமும் காணப்படும் குடிப்பழக்கம் மற்றும் கல்லீரல் நோய் போக்குகளை உருவகப்படுத்தினர். கோவிட்-19 தொற்று நோய்களின் போது மது அருந்துவதில் ஒரு வருடம் காணப்பட்ட அதிகரிப்பு, வரும் 2040-ஆம் ஆண்டளவில் ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோயால் 8,000 கூடுதல் இறப்புகள், 18,700 கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் 1,000 கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.



அதே போல கோவிட்-19 தொற்றால் குறுகிய காலத்தில் மது அருந்தும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வரும் 2023-ஆம் ஆண்டளவில் 100 கூடுதல் இறப்புகளையும் 2,800 கூடுதல் கல்லீரல் செயலிழப்பு நிகழ்வுகளையும் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். ஆக மொத்தம் ஒரு வருடத்திற்கும் மேலாக மது அருந்துவதில் காணப்பட்ட நீடித்த அதிகரிப்பு 19 முதல் 35 சதவீதம் வரை கூடுதல் இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

New Year Resolution 2022 : வருகிற புத்தாண்டிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த உறுதிமொழிகள்..!

COVID-19 தொற்று நோய்களின் போது அமெரிக்காவில் அதிகமாக ஆல்கஹால் நுகரும் பழக்கத்தை தவிர்க்க தனிநபர்களும், கொள்கை வகுப்பாளர்களும் உரிய முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை தங்களது இந்த கண்டுபிடிப்புகள் எடுத்து காட்டுவதாக ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் ரேடியாலஜி உதவி பேராசிரியராக இருக்கும் ஜக்ப்ரீத் சத்வால் கூறி உள்ளார்.



கோவிட் தொற்று அறியப்படாத நீண்ட கால தாக்கத்துடன் பல எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் மாடலிங் ஆய்வு, கோவிட்-19 உடன் தொடர்புடைய அதிகரித்த மது அருந்துவதன் நீண்டகால தாக்கத்தை அளவிட, சாத்தியமான தலையீடுகளுக்கான நடவடிக்கைகளை துவங்க ஒரு கட்டமைப்பை வழங்குகிறது என ஆய்வின் இணை ஆசிரியர் Turgay Ayer குறிப்பிட்டுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol consumption, Death, Liver Health

அடுத்த செய்தி