முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபட உதவும் வெஜிடபிள் ஜூஸ்..!

மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபட உதவும் வெஜிடபிள் ஜூஸ்..!

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

நாள் முழுவதும் உடலுக்கு போதுமான அளவு திரவங்கள் மற்றும் தண்ணீரை உட்கொள்ளாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் போதுமான திரவம் இல்லாததால் குடலின் இயல்பான மற்றும் ஆரோக்கிய இயக்கம் தடைபடும்.

  • 1-MIN READ
  • Last Updated :

நீங்கள் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது உங்கள் குடல் இயக்கம் திடீரென கடினமாகிறதா? அல்லது நீங்கள் புதிதாக துவக்கி இருக்கும் டயட் பிளான் காரணமாக உங்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள். மலச்சிக்கல் என்பது "பிளக்ட் அப்" ("plugged up) என்று குறிப்பிடப்படும் ஒரு உடல்நல சிக்கல் ஆகும். இது பயம் மற்றும் குடல் வலி இயக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது.

மலச்சிக்கல் என்பதை தினசரி மலம் கழிக்க முடியாமல் இருப்பது மற்றும் மலத்தை வெளியேற்ற கஷ்டப்டப்படும் நிலையை குறிக்கும். சில நேரங்களில் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான நிலைகளில் ஒன்றாக இருந்தாலும் வலி மற்றும் அசௌகரியம் தவிர, மக்களுக்கு ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறது. வாழ்க்கை முறை பழக்கங்கள் முதல் உணவு முறை மாற்றங்கள் வரை தொந்தரவுக்கு உள்ளாகும் குடல் இயக்கங்கள் பல்வேறு காரணிகளிலிருந்து உருவாகின்றன. மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன.

ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பின்மை, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, சில மருந்துகளின் பக்க விளைவுகள், அடிப்படை சுகாதார சிக்கல் , நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சாப்பிடும் அல்லது தூங்க செல்லும் வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதிக அளவு பால் அல்லது சீஸ் சாப்பிடுவது, மன அழுத்தம் உள்ளிட்டவை சில பொதுவான காரணங்கள். மலச்சிக்கலால் அவதிப்பட்டால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

திரவங்கள்..

நாள் முழுவதும் உடலுக்கு போதுமான அளவு திரவங்கள் மற்றும் தண்ணீரை உட்கொள்ளாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் போதுமான திரவம் இல்லாததால் குடலின் இயல்பான மற்றும் ஆரோக்கிய இயக்கம் தடைபடும். எனவே தினசரி உட்கொள்ளும் திரவங்களை தேவையான அளவு தண்ணீர், பழச்சாறுகள் போன்றவை மூலம் பூர்த்தி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

நார்ச்சத்து:

ஆரோக்கியமான செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நார்ச்சத்து (ஃபைபர்) எனப்படும் ஊட்டச்சத்து அவசியம். மேலும் இந்த சத்து மலச்சிக்கலைத் தடுப்பதோடு ஒருங்கிணைந்த குடல் இயக்கங்களை எளிதாக்கும்.

ஃபிட்னஸ்:

உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாமல் தொடர்ந்து மந்தமாக இருப்பது உடலின் செரிமான அமைப்பை பாதிக்கலாம். இதன் விளைவாக மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

ஜூஸ்..

வீக்கம் மற்றும் மலச்சிக்கலின் சிக்கல்களை சமாளிக்க உதவும் வழக்கத்திற்கு மாறான வெஜிடபிள் ஜூஸ் ஒன்றை பற்றி இங்கே பார்க்கலாம். நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சிவரிக்கீரையை (Celery) ஜூஸாக குடிப்பதால் செரிமான ஆரோக்கியம் மேம்படும், ஆரோக்கியமான குடல் இயக்கம் கிடைக்கும். முக்கியமாக மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும். பின்வரும் முறைகளில் செலரி ஜூஸ் (celery juice) தயார் செய்யலாம்..

* ஃபிரெஷ்ஷானமற்றும் கழுவப்பட்ட Celery-யின் 2 தண்டுகளை எடுத்து கொள்ளுங்கள்

ஆண்மையை அதிகரிக்க உதவும் பனங்கிழங்கு… இதன் 8 வகை நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

* தண்டின் மேல் மற்றும் அடிப்பாகத்தை நறுக்கவும்

* தண்டின் திடமான அமைப்பை உருமாற்ற Celery-யை எலுமிச்சை அல்லது விருப்பமான பிற பொருட்களை சேர்த்து கலக்கவும்

* சில நிமிடம் கழித்து அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும்

* இந்த கலவையை ஒரு கிளாஸில் வடிகட்டி மலச்சிக்கலை போக்க உதவும் க்ரீன் ஜூஸை குடிக்கவும்.

First published:

Tags: Constipation, Vegetables