இன்றைய சூழலில் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாகவும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களினாலும் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20% பேருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதினரை விட வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதிக அளவில் உள்ளது. முக்கியமாக வயது முதிர்ந்த பெண்களுக்கு மிகக் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலையில் தான் அவர்களின் உடல்நிலை உள்ளது.
மலச்சிக்கல் ஒருவருக்கு உண்டானாலே, உடலில் ஆரோக்கியத்தை கெடுத்து, கொடுமையான நோய்களுக்கு வழியை ஏற்படுத்தி விடும். எனவே மலச்சிக்கல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி அறிவதும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றிய அறிவைப் பெறுவதும் முக்கியமானது ஆகும்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மாறிவரும் வாழ்க்கை முறை நார்ச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், குறைந்த அளவு தண்ணீர் பருகுதல், குறைந்த அளவிலான உடற்பயிற்சி ஆகியவை மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும். இதைத் தவிர தைராய்டு பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இதய கோளாறுகள் பர்கின்சன் நோய், முதுகுத்தண்டு பிரச்சனைகள் ஆகியவையும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. மேலும் உடலில் உள்ள நோய்களுக்காக மக்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளினாலும் மலச்சிக்கல் உண்டாகிறது.
மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல் அல்லது உடல் எடை குறைவதும் மலச்சிக்கல் தீவிரமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். மேலும் மலவாயில் உண்டாகும் கட்டிகள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். முடிந்தளவு மலச்சிக்கல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்து விடுவது நல்லது.
மலச்சிக்கலுக்கான சிகிச்சை முறைகள்:
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். மலச்சிக்கலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மூன்று விதமாக பிரிக்கலாம். ஸ்டூல்ஸ் சாஃப்ட்னர் ஃபைபர்ஸ், லாக்சேட்டிவ் மற்றும் கோலன் இயக்கத்தை அதிகப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
நீண்ட நாட்களுக்கும் சிகிச்சை ஏதும் அளிக்காமல் மலச்சிக்கலை நீடிக்க வைத்தால், அவை மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவதையும் வழிதரக்கூடிய கட்டிகளையும் ஆசன வாயில் உண்டாக கூடும். மேலும் இவை அதிகமான மன உளைச்சலை உண்டாக்க கூடும். சரியான உறக்கமின்மை. மன அழுத்தம், சமநிலையற்ற புத்தி ஆகியவை ஏற்படும். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி மலச்சிக்கல் என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு நோய் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் இது சரியாக சிகிச்சை அளிக்கும் பட்சத்தில், மிக எளிதில் சரி செய்யப்பட கூடிய நோயாகும். அதே சமயத்தில் மலச்சிக்கலானது மீண்டும் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
Also Read : Constipation : மலச்சிக்கலால் அவதியா..? இந்த விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும், சரியான உணவு பழக்க வழக்கங்களின் மூலமும் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கவும் அதிலிருந்து விடுபடவும் முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Constipation, Health, Treatment