முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? உடனே மருத்துவரை அணுகுங்கள்...

இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? உடனே மருத்துவரை அணுகுங்கள்...

சிறுநீரக பாதிப்புகள்

சிறுநீரக பாதிப்புகள்

இதற்கு எவ்வித சிகிச்சைகளும் எடுக்காத பட்சத்தில் தான் சிறுநீர்ப்பை புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுக்கு இடுப்பு பகுதியில் வலி, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்றவை சிறுநீர் பாதை தொற்றினால் (Urinary Tract infection) மட்டும் ஏற்படுவதில்லை எனவும் சிறுநீர்ப்பை நோயினாலும் (painful bladder syndrome) ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இன்றைக்கு பெண்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் ஏதேனும் ஒரு முறையாவது சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 6 மாதத்திற்கு ஒரு முறையாவது ஐந்தில் ஒரு பெண் சிறுநீரகத் தொற்று பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வு. இந்நோய் தொற்றினால் பாதிக்கப்படும் போது ஒருவக்கு சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல் போன்றவை சிறுநீர்ப்பைத் தொற்றின் அறிகுறிகளாகும்.

குறிப்பாக எவ்வித வேலையும் செய்ய முடியாத நிலையில் அடிக்கடி காய்ச்சல், இடுப்புப் பகுதியில் வலி போன்றவையால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனைகள் ஆண்களுக்கும் பல சமயங்களில் ஏற்படக்கூடும். இது போன்று தான் 21 வயதான TikTok பயனர் breannerodgers என்பவர் தனக்கு சிறுநீர்ப்பாதை தொற்று தான் ஏற்பட்டுள்ளது என அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பரிசோதனை செய்ததில், அவருக்கு சிறுநீர்ப்பாதை நோயினால் ((painful bladder syndrome) அவதிப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதற்கு எவ்வித சிகிச்சைகளும் எடுக்காத பட்சத்தில் தான் சிறுநீர்ப்பை புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே இடுப்புப் பகுதியில் வலி , அடிக்கடி சிறுநீர் கழிப்பது, போன்ற பல பிரச்சனைகள் இருந்தால் முறையாக பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை குறித்து பாராஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் நேஹா பதானியா தெரிவிக்கையில், சிறுநீர்ப்பை பயிற்சி, உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கங்கள், சரியான ஆடைகளை அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும் என்கின்றார்.

உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

சிறுநீர்ப்பை பயிற்சி- நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், சிறுநீர் வந்தால் உடனே கழிவறைக்கு சென்றுவிட வேண்டும். இதோடு மட்டுமில்லாமல் அரை மணி நேரம் அல்லது குறிப்பிட்ட சில இடைவெளிகளில் நீங்கள் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீரத்தின் வாயிலாக வெளியேறும் போது தேவையில்லாத வலி மற்றும் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாது.

சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீர்ப்பை நோயைத் தடுக்கும் வழிமுறைகள்..

1. உங்களது வயிற்றுப் பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

2. மன அழுத்ததத்தைக் குறைக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வாழைப்பழம் : ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..?

3. புகைப்பிடிப்பது உங்களது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு வழிவகிக்கிறது என்பதால் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

4. முறையான உடற்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

5. கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6.உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். பொதுவாக அதிகளவு தண்ணீர் குடிக்காத போது தான் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது சிறுநீர் கழிப்பதிலும் எவ்வித பிரச்சனைகளும் நமக்கு ஏற்படாது.

7. பிறப்புறப்பின் வழியாக பாக்டீரியாக்கள் செல்லும் என்பதால் ஈரமான உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உடலுறவு மேற்கொண்ட பின்னர் நிச்சயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.

top videos

    எனவே சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீர்ப்பை நோயினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு இடுப்புப் பகுதியில் வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடலுறவின் போது வலி ஏற்படும் பிரச்சனைகள் இருந்தால் அலட்சியாக இல்லாமல் மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

    First published:

    Tags: Bladder, Kidney Disease, Urinary Tract Infection