• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் க்ரீன் டீ: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..

புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் க்ரீன் டீ: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

இது குறித்து நியூயார்க்கின் டிராய் நகரில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் பேராசிரியர் சுன்யு வாங் கூறியதாவது, " P53 மற்றும் EGCG மூலக்கூறுகள் இரண்டும் மிகவும் சுவாரஸ்யமானவை. P53 இல் உள்ள பிறழ்வுகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மனித புற்றுநோய்களில் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள பானமான கிரீன் டீயில் உள்ள ஒரு கலவை புற்றுநோய் எதிர்ப்பு புரதத்தின் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே கிரீன் டீ குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் டி.என்.ஏ சேதத்தை சரிசெய்யும் அல்லது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனுக்காக அறியப்படுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில், புற்றுநோய் எதிர்ப்பு புரதம் p53 மற்றும் கிரீன் டீ கலவையில் எபிகல்லோகாடெசின் கேலேட் (EGCG) ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்பு என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பில் புதிய இலக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து நியூயார்க்கின் டிராய் நகரில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் பேராசிரியர் சுன்யு வாங் கூறியதாவது, " P53 மற்றும் EGCG மூலக்கூறுகள் இரண்டும் மிகவும் சுவாரஸ்யமானவை. P53 இல் உள்ள பிறழ்வுகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மனித புற்றுநோய்களில் காணப்படுகின்றன. அதே நேரத்தில் உலகளவில் பிரபலமான பானமான க்ரீன் டீயில் EGCG முக்கிய ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

இரண்டு மூலக்கூறுகளுக்கும் இடையில் முன்னர் அறியப்படாத, நேரடி தொடர்பு ஒன்றை இப்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான புதிய பாதையை சுட்டிக்காட்டியுள்ளது. P53-ன் புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை EGCG எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவியுள்ளது. மேலும், EGCG போன்ற சேர்மங்களுடன் மருந்துகளை உருவாக்க எங்களுக்கு ஒரு பாதையை உருவாக்கித்தந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

புரதம் p53 நன்கு அறியப்பட்ட பல புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் டி.என்.ஏ பழுதுபார்க்க அனுமதிக்க உயிரணு வளர்ச்சியை நிறுத்துதல், டி.என்.ஏ பழுதுபார்ப்பதை செயல்படுத்துதல் மற்றும் டி.என்.ஏ சேதத்தை சரிசெய்ய முடியாவிட்டால் அப்போப்டொசிஸ் எனப்படும் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பைத் தொடங்குதல் போன்ற நோய்எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இந்த புரதத்தின் ஒரு முனை, என்-டெர்மினல் டொமைன் (N-terminal domain) என அழைக்கப்படுகிறது. இது ஒரு நெகிழ்வான வடிவத்தைக் கொண்டுள்ளது. எனவே, பல மூலக்கூறுகளுடனான அதன் தொடர்புகளைப் பொறுத்து பல செயல்பாடுகளை p53 புரதத்தால் செய்ய முடியும்.

இதையடுத்து EGCG ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும். அதாவது ஆக்சிஜன் வளர்சிதை மாற்றத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலையான சேதத்தை சரிசெய்ய இது உதவுகிறது. கிரீன் டீயில் ஏராளமாகக் காணப்படும் இந்த EGCG ஒரு மூலிகையாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் EGCG மற்றும் p53-க்கு இடையிலான தொடர்பு புரதத்தை சீரழிவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Also read... கேன்சர் இருக்கிறதா? ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்...

பொதுவாக, இந்த p53 உடலுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், என்-டெர்மினல் டொமைன் MDM2 எனப்படும் புரதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அவை விரைவாக சிதைந்துவிடும். உற்பத்தி மற்றும் சீரழிவின் இந்த வழக்கமான சுழற்சி, p53 நிலைகளை குறைந்த அளவில் வைத்திருக்கிறது.

இது குறித்து வாங் கூறியதாவது, "EGCG மூலக்கூறு p53 உடன் பிணைக்கப்படும் போது, MDM2 மூலம் புரதம் சிதைக்கப்படுவதில்லை. எனவே EGCG  உடனான நேரடி தொடர்பு மூலம் p53-ன் அளவு அதிகரிக்கும். அதாவது புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உங்கள் உடலில் அதிக p53 இருக்கும். இது ஒரு மிக முக்கியமான தொடர்பு, "என்றார் பேராசிரியர் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: