நாட்டில் கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். ஆண்டின் மற்ற பருவங்களை விட கோடை காலத்தில் பல நோய்கள் பொதுவானவை. கோடைகாலத்தில் ஏற்பட கூடிய சில பொதுவான நோய்கள் உள்ளன.
இந்த நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவே முழுமையாக துவங்க உள்ள கோடை சீசனுக்கு முன்னதாக கோடைகாலத்தில் ஏற்பட கூடிய சில பொதுவான நோய்கள் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோடைகால நோய்களின் பட்டியல் இங்கே..
ஹீட் ஸ்ட்ரோக் :
ஹீட் ஸ்ட்ரோக் என்பதை தமிழில் வெப்ப பக்கவாதம் எனலாம். கடக்கும் கோடையில் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் இந்நோய் ஏற்படும். பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, மயக்கம், அதிகரித்த இதயத் துடிப்பு அல்லது இதுபோன்ற பிற அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும். நிலைமை மோசமானால் மரணம் கூட ஏற்படும்.
ஃபுட் பாய்ஸனிங் :
அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் உணவுவழி நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதிக சூடான மற்றும் ஈரப்பதமான வானிலை உணவு மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. பல வகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது நச்சுகளுடன் தொடர்பு கொண்ட உணவை ஒருவர் சாப்பிடும்போது இந்த நோய் ஏற்படலாம். வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை ஃபுட் பாய்ஸனிங் ஏற்படுத்துகிறது. இது மிகவும் பொதுவான கோடைகால நோய்களில் ஒன்று.
டிஹைட்ரேஷன் :
கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் நீரிழப்பு சிக்கலும் ஒன்று. கடும் வெயில் காரணமாக வியர்வை வடிவில் நிறைய தண்ணீர் மற்றும் உப்புகளை உடலில் இருந்து இழக்கிறோம். உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு இது அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும்.
பொன்னுக்கு வீங்கி (Mumps) :
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான ஒரு நோயாக இது அறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்முவது அல்லது இருமுவதால் பிறருக்கு இது பரவுகிறது. இந்நோய் காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பியை பாதிக்கிறது. கடுமையான வீக்கம், வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
கோடை காலத்தில் வியர்வை, துர்நாற்றத்தை சமாளிக்க சில ஸ்மார்ட் ஆன யோசனைகள்!
சிக்கன்பாக்ஸ் :
சிக்கன்பாக்ஸ் என்பதை சின்னம்மை என்று தமிழில் குறிப்பிடுகிறோம். கோடைக்காலத்தில் இது அதிகம் பரவ கூடியது. சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella Zoster) என்கிற வைரஸ்தான். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கொப்புளங்கள், தோல் அரிப்பு, சிவத்தல், காய்ச்சல், பசியின்மை மற்றும் தலைவலி உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகள்.
டைஃபாய்டு :
இது நீரால் பரவும் நோயாகும். அதிக காய்ச்சல், சோர்வு, பலவீனம், வயிற்று வலி, தலைவலி மற்றும் பசியின்மை ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
சன்பர்ன் :
சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் நம் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் ஏற்படுகிறது. பொதுவான அறிகுறிகளாவன தோல் சிவந்து போதல், சிவந்த தோலை தொடும் போது வலி அல்லது எரிச்ச, சோர்வு, லேசான தலைச்சுற்றல்.
உஷார்..! சிறுநீரக செயலிழப்பை எச்சரிக்கும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்..!
ஹீட் ரேஷஸ் :
வியர்வை குழாய்கள் தடைப்பட்டு வீங்கி, தோலில் புள்ளிகள் அல்லது சிறிய பருக்கள் போல் தோற்றமளிக்கும் போது ஹீட் ரேஷஸ் உருவாகிறது. குழந்தைகளில் மிகவும் பொதுவானது. இது அடிக்கடி அரிப்பை ஏற்படுத்தும்.
கோடை நோய்களைத் தவிர்க்க சில டிப்ஸ்..
* நாளையொன்றுக்கு சராசரியாக 10-12 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள்.
* தண்ணீர் அத்தவிர இளநீர், மோர் மற்றும் லெமன் ஜூஸ் போன்ற திரவ உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
* பருத்தி ஆடையை அணிந்து வெளியே செல்லுங்கள்.
* கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தர்பூசணி, வெள்ளரி, கரும்பு மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் மற்றும் நிறைய காய்கறிகளை சாப்பிடுங்கள்
* வெளியே செல்லும் போது சன்கிளாஸ் மற்றும் கேப் அணிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.