பெண்களின் பல்வேறு அத்தியாயங்களை கொண்டுள்ளது. பருவம் அடைவது, மாதவிலக்கு நிற்பது மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. சில பெண்களுக்கு இந்த மாற்றங்களை எதிர்கொள்வது எளிமையானதாகவும், சிரமம் இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், அனேக பெண்களுக்கு இது சவால் மிகுந்ததாகவும், சிரமன்களைத் தருவதாகவும் இருக்கும்.
பொதுவாக பெண்கள் ஒருமுகம் கொண்டவர்கள் அல்ல. சக்தி, தைரியம், வசீகரம் என பல குணாதியசங்களை உள்ளடக்கியவர்கள் பெண்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயம் மாறும்போதும் ஒரு படி முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டு கடமைகள், அலுவலகப் பணி போன்ற வாழ்வின் பன்முகத் தேவைகளுக்கு ஏற்ப தங்களை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பருவம் அடையும் வயது :
பருவம் அடைதல் என்பது முதலாவது மாதவிலக்கு காலம் ஆகும். ஒரு பெண் வளர்ச்சி அடைந்து விட்டார் என்பதையும், இல்லற வாழ்க்கைக்கு தயார் ஆகிவிட்டார் என்பதையும் இது உணர்த்துகிறது. பொதுவாக 11 வயது முதல் 14 வயதில் பெண்கள் பருவம் அடைவது வழக்கம். ஆனால், சமீப காலங்களில் பெண்களின் பருவ வயது உலக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சில பெண்கள் 8 வயதில் கூட பருவம் அடையும் நிகழ்வு அரன்கேறுகிறது.
முன்கூட்டியே பருவம் அடைவதால் ஏற்படும் சிக்கல்கள் :
மிக இளம் வயதில் பருவம் அடையும் பெண்களுக்கு இதய பாதிப்புகள், மார்பக புற்றுநோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் வாழ்க்கையின் பின்னாளில் ஏற்படக் கூடும். போதுமான உணவு சாப்பிடுவதில் சிக்கல் ஏற்படலாம். இது மட்டுமின்றி மன அழுத்தம் ஏற்படும். முன்கூட்டியே பாலியல் ஆசைகள் உருவெடுக்கும்.
இரத்த வகையை வைத்தே உங்கள் இதய ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம் : எப்படி தெரியுமா..?
பருவம் அடைவதற்கு முந்தைய பிரச்சினைகள் :
பெண்கள் பருவம் அடைவதற்கு முன்பாகவே எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். குறிப்பாக தலை சுற்றல், மயக்கம், மூட்டு வலி, வயிற்றுப் போக்கு, உடல் பருமன் போன்ற சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கோபம், கவலை, மன அழுத்த பிரச்சினைகள், பசி மாற்றம் ஓன்ற சிக்கல்கள் உண்டாகும். துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள் முன்கூட்டியே பருவம் அடையக் கூடும். இனிப்பான உணவுகள், காஃபி அருந்துவது போன்ற பழக்கங்கள் காரணமாகவும் இந்த சிக்கல் உண்டாகக் கூடும்.
மாதவிலக்கு ஒழுங்கு மற்றும் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் :
பெண்களுக்கு மாதவிலக்கு முறையான கால அளவில் நடைபெற்றாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். முறையற்ற மாதவிலக்கு இருக்கிறது என்றால் உடல் எடை அதிகரிப்பு, வயிறு உப்புசம், மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற சிக்கல்கள் உண்டாகும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் பெண்கள் ஆரோக்கியமான உணவு பழக்க, வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவை அவசியம்.
ஆரோக்கிய டிப்ஸ் :
மாதவிலக்கு காலத்தில் அசோகா, லோத்ரா, கற்றாழை, சாத்தாவாரி மற்றும் சந்தானா போன்ற ஆயுர்வேத மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்க்கலாம். ஆயுர்வேத மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து கூடுதல் பலன் அடையலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.