கொரோனா பாதிப்பின் ஆரம்ப சிகிச்சைக்கு பொதுவான ஒ.சி.டி மருந்தினை பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் கருத்து

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆரம்ப அறிகுறைகளை எதிர்கொள்ளும் ஒரு நபர் பொதுவான ஓசிடி மருந்தினை உபயோகிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பின் ஆரம்ப சிகிச்சைக்கு பொதுவான ஒ.சி.டி மருந்தினை பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் கருத்து
கோப்பு படம்
  • News18
  • Last Updated: November 18, 2020, 7:14 PM IST
  • Share this:
மன சுழற்சி நோய் அல்லது ஓ.சி.டிக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தினை கொரோனா வைரஸ் பாதித்த முதல் ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளும் போது, அது மூச்சு திணறல் ஆபத்தை குறைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்கான புதிய சிகிச்சை உத்திக்கு ஒரு முன்னேற்றமாக அமையும் என தெரிவித்துள்ளனர். JAMA இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், placebo எனப்படும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத மருந்தினை எடுத்துக்கொண்ட 72 நோயாளிகளில் 8.3 சதவீதத்தினருக்கு சுவாசக் குறைபாடு ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிடும்போது, ஆன்டிடிப்ரஸன்ட் ஃப்ளூவோக்சமைன் மருந்தினை எடுத்துக்கொண்ட 80 நோயாளிகளில் ஒருவர் கூட சுவாசக் குறைவை சந்திக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வின் இணை ஆசிரியர் கரோலின் மச்சமர் கூறியதாவது, "ஃப்ளூவொக்சமைன் சோதனையின் முடிவுகள் ஒரு பெரிய ஆய்விற்கு ஊக்கமளிக்கவும். மேலும் மதிப்பீடு செய்வதற்கு உத்தரவாதமும் அளிக்கின்றன.

கொரோனா வைரசின் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நுரையீரல் பிரச்சினைகளைத் தடுக்கும் சிகிச்சைக்கு இந்த மருந்து மிகவும் அவசியமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பொதுவாக ஒ.சி.டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஃப்ளூவோக்சமைன், வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.


Also read... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி Covaxin 3-ஆம் கட்ட சோதனையில் நுழைந்தது..அவற்றின் திறன் சைட்டோகைன் புயல்களைத் தடுக்கக்கூடும். எனவே சில நேரங்களில் கொடிய கொரோனா வைரஸுக்கு அழற்சி எதிர்வினையாக ஒ.சி.டி மருந்து செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் மொத்தம் 152 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 18 முதல் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவர். மேலும் அவர்கள் தோராயமாக ஃப்ளூவொக்சமைன் மற்றும் placebo மருந்தினை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் ஓடிசி மருந்து பெற்ற 80 பங்கேற்பாளர்களில் எவரும் மருத்துவச் சரிவின் இறுதிப் புள்ளியைத் அடையவில்லை. மேலும் placebo மருந்தினை எடுத்துக்கொண்ட 72 பேரில் 6 பேருக்கு இரத்த ஆக்ஸிஜன் அளவு கணிசமாகக் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முடிவுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் ஃப்ளூவொக்சமைனுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது பற்றி பேசிய ஆய்வின் மற்றொரு இணை எழுத்தாளர் ஸ்டீவ் கிர்ச், "மலிவான, பாதுகாப்பான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மாத்திரை இதுவாகும்.

மேலும் இது கொரோனா வைரஸ் தீவிரமடைவதை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சேர்வதை குறைக்கவும்  உதவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இப்போது எங்களிடம் உள்ளன" என்று கூறியுள்ளார்.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading