கொரோனா பாதிப்பின் ஆரம்ப சிகிச்சைக்கு ஒ.சி.டி மருந்தை பயன்படுத்தலாம் : விஞ்ஞானிகள் கருத்து..

ஒ.சி.டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஃப்ளூவோக்சமைன், வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் ஆரம்ப சிகிச்சைக்கு ஒ.சி.டி மருந்தை பயன்படுத்தலாம் : விஞ்ஞானிகள் கருத்து..
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 10:52 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆரம்ப அறிகுறைகளை எதிர்கொள்ளும் ஒரு நபர் பொதுவான ஓசிடி மருந்தினை உபயோகிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்சசிவ் கம்பல்சிவ் கோளாறு அல்லது ஒ.சி.டி.க்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தினை கொரோனா வைரஸ் அறிகுறிகளின் போது முதல் ஏழு நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், அது சுவாச குறைவுக்கான ஆபத்தை குறைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க புதிய சிகிச்சை மூலோபாயத்திற்கு வழிவகுக்கும் ஒரு முன்னேற்றம் என தெரிவித்துள்ளனர்.

JAMA இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், டம்மி மாத்திரை (placebo) எடுத்துக்கொண்ட 72 நோயாளிகளில் 8.3 சதவீத சுவாச குறைபாடோடு ஒப்பிடும்போது, ஆண்டிடிப்ரஸன்ட் ஃப்ளூவோக்சமைனை எடுத்துக்கொண்ட 80 நோயாளிகளில் ஒருவர் கூட சுவாசக் குறைவு அளவுகோல்களைச் சந்திக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


கொரோனா பரவலைத் தடுக்க பாதுகாப்பு என நினைக்கும் இவையெல்லாம் பாதுகாப்பு அல்ல

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வின் இணை ஆசிரியர் கரோலின் மச்சமர் கூறியதாவது, "ஃப்ளூவொக்சமைன் சோதனையின் முடிவுகள் ஒரு பெரிய ஆய்விற்கு ஊக்கமளிக்கவும், மேலும் மதிப்பீடு செய்வதற்கு உத்தரவாதமும் அளிக்கின்றன. கொரோனா வைரசின் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நுரையீரல் பிரச்சினைகளைத் தடுக்கக்கூடிய ஒரு சிகிச்சை மிகவும் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பொதுவாக ஒ.சி.டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஃப்ளூவோக்சமைன், வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவற்றின் திறன் சைட்டோகைன் புயல்களைத் தடுக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே உடலின் மிகப்பெரிய ஆபத்தான, சில நேரங்களில் கொடிய கொரோனா வைரஸுக்கு அழற்சி எதிர்வினையாக ஒ.சி.டி மருந்து செயல்படலாம். இந்த ஆய்வில் மொத்தம் 152 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவர்.

மேலும் அவர்கள் தோராயமாக ஃப்ளூவொக்சமைன் அல்லது டம்மி மருந்தினை (placebo) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஓடிசி மருந்து பெற்ற 80 பங்கேற்பாளர்களில் எவரும் மருத்துவச் சரிவின் இறுதிப் புள்ளியைத் அடையவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் டம்மி மருந்து குழுவில் உள்ள 72 பேரில் 6 பேருக்கு இரத்த ஆக்ஸிஜன் அளவு கணிசமாகக் குறைந்தது என தெரிவித்துள்ளனர்.



முடிவுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் ஃப்ளூவொக்சமைனுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது பற்றி பேசிய ஆய்வின் மற்றொரு இணை எழுத்தாளர் ஸ்டீவ் கிர்ச், "மலிவான, பாதுகாப்பான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மாத்திரை, கொரோனா வைரஸ் தீவிரத்தையும், அவர் மருத்துவமனையில் சேர்வதையும் குறைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது எங்களிடம் உள்ளன" என்று கூறியுள்ளார்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading