ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்... இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன..?

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்... இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன..?

ஜலதோஷம், காய்ச்சல் ஆகிய இரண்டின் அறிகுறிகள் ஒன்று போல தோன்றினாலும், அவற்றிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. குழந்தைகள் உள்ள வீட்டில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகிய இரண்டுமே பருவகால நோய்கள் தான். தற்போதைய மழைக் காலத்திலும் கூட இந்த நோய்கள் பலரை பாதிக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, ஜலதோஷம், காய்ச்சல் ஆகிய இரண்டுக்குமான அறிகுறிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜலதோஷம், காய்ச்சல் ஆகிய இரண்டின் அறிகுறிகள் ஒன்று போல தோன்றினாலும், அவற்றிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. குழந்தைகள் உள்ள வீட்டில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

பிரதான வேறுபாடு என்ன?

காய்ச்சலின் அறிகுறிகள் மிக தீவிரமானதாக இருக்கும். அதன் பக்க விளைவுகளும் தீவிரத்தன்மை உடையதாக இருக்கும். அதே சமயம், ஜலதோஷத்தின் அறிகுறியும் ஏறக்குறைய இதேபோல இருப்பதால் சாமானிய மக்களால் இதை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

ஜலதோஷத்தின் அறிகுறிகள் படிப்படியாக அதிகரிக்கும். ஆரம்பத்தில் மூக்கில் இருந்து நீர்த்துளிகள் ஒழுகி வர தொடங்கும். அதன் பிறகு தும்மல், சளி என்று ஒவ்வொரு கட்டமாக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், காய்ச்சலின் அறிகுறி திடீரென்று தோன்றி, வெகுவிரைவாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

பொதுவாக 100 டிகிரிக்கும் மேலாக காய்ச்சல் ஏற்பட்டது என்றால் அது 3 முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும். தசைகள், பின் இடுப்பு போன்ற பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி உண்டாகலாம். ஜலதோஷத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த தொந்தரவுகள் ஏற்படக் கூடும். உங்கள் உடல்நிலை எதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஓரிரு நாட்களில் தெரியவில்லை என்றால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Also Read : குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஆகிய இரண்டுமே சுவாச பிரச்சினைகளை உண்டு செய்கின்ற நோய்கள் தான். உதாரணத்திற்கு கொரோனா தொற்றாக கூட இருக்கும். இதுபோன்ற தீவிர தொற்று ஏற்படுபவர்களுக்கு சுவையை உணரும் தன்மையை இழக்க நேரிடலாம்.

தற்காத்துக் கொள்ள என்ன வழி?

மழைக்காலங்களில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது நல்ல பலனை தரும். இறைச்சி வகை உணவுகளை மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. உண்ணும் உணவுகள் சூடானதாக, சுகாதாரம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

துளசி, மஞ்சள், இஞ்சி போன்றவை சேர்க்கப்பட்ட டீ அருந்துவது நல்ல பலனை தரும். காய்கறி சூப் அருந்துவது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எளிதில் ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்பு உள்ள நபர்கள் மழைக்காலத்தில் வாழை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தவிர்க்கவும்.

பூண்டு, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து ரசம் செய்து, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனை தரும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Cold, Fever