Home /News /lifestyle /

வைட்டமின் சப்ளிமெண்ட் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு

வைட்டமின் சப்ளிமெண்ட் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு

விட்டமின் மாத்திரை

விட்டமின் மாத்திரை

பெரும்பாலும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்று நம்பி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பலரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் எந்த சப்ளிமெண்ட் ஆக இருந்தாலும் அது ஓவர்டோஸ் ஆகும் போது உடலுக்கு தீவிரமான பாதிப்பை விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆரோக்கியமான உணவுகள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிய வரும்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சில சமயங்களில் உணவின் மூலமாக மட்டுமே பெற முடியாது. அத்தகைய நேரத்தில் வைட்டமின் மற்றும் மினரல் சப்ளிமெண்ட்டுகள் மாத்திரை வடிவில், டானிக் வடிவில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

சப்ளிமெண்ட்கள் என்பது நமக்கு புதிதல்ல; மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமலேயே ஓவர் தி கவுன்ட்டர் சப்ளிமெண்ட்ஸ் என்று நாம் மருந்து கடைகளில் இருந்து வாங்க முடியும். இதில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது வைட்டமின் சப்ளிமெண்ட்கள் தான். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சப்ளிமெண்ட்டுகள் சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பலரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளிவந்துள்ளது.

வைட்டமின் சப்ளிமெண்ட் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயம் பற்றிய ஆய்வு

வைட்டமின் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதால் கேன்சர் உண்டாகும் அபாயம் இருக்கிறதா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ என்ற, இரண்டு சப்ளிமெண்ட்டுகளையும் சேர்த்து சாப்பிடும் பொழுது நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரித்து இருப்பதாக ஒரு மருத்துவ ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சுற்றுச்சூழல் மாசுபாடு, கெமிக்கல் எக்ஸ்போஷர், ஆஸ்பெஸ்டாஸ் எக்ஸ்போஷர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் நபர்களுக்கு பொதுவாகவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இத்தகைய நபர்கள் இந்த சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.

இரண்டு ரேண்டம் சோதனைகள் இந்த ஆய்வில் நடத்தப்பட்டன. அதில் ஏற்கனவே புற்றுநோய் ஏற்படக்கூடிய அதிக அபாயமுள்ள நபர்களில் பீட்டாகரோட்டின் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது கேன்சர் உண்டாகும் ரிஸ்க்கை மேலும் அதிகரித்துள்ளது.

சாப்பிடும் உணவு செரிமானிப்பதில்லையா..? தினசரி உணவில் இந்த காய்கறிகளை சேத்துக்கோங்க...

புகை பிடிப்பவர்கள் சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து 18% அதிகரித்துள்ளதாகவும் மற்றவர்களுக்கு 28% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செலினியம் மற்றும் வைட்டமின் ஈ கேன்சர் தடுப்பு சோதனையில், நாளொன்றுக்கு 400 IU அளவுக்கு வைட்டமின் ஈ சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வது, ஆண்களில் பிரோஸ்டேட் கேன்சர் ஏற்படக்கூடிய ஆபத்தை 17% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



ஆய்வில் கூறப்பட்டுள்ள மற்ற முக்கிய விஷயங்கள்

சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்வதால் கேன்சர் ஆபத்தில் மட்டுமல்லாமல் உடலுக்கு வேறு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றது என்பதை பற்றியும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

மருத்துவரால் அதிகமாக பரிந்துரை செய்யப்படுவது வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட் ஆகும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களின் சப்ளிமெண்ட் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும், அது உடலில் முழுமையாக கிரகித்துக்கொள்ள ஒரு துணை ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதேபோல தான் வைட்டமின் டி சத்தை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு கால்சியம் சத்து தேவைப்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துமே முதியவர்களுக்கு எலும்பு பலவீனமாவதை தடுத்து ஃபிராக்ச்சரைக் குறைக்கிறது.

தண்ணீர் குடிப்பதற்கு கூட இத்தனை ரூல்ஸ் இருக்கா..? நீங்க இதையெல்லாம் ஃபாலோ பண்றீங்களா..?

ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எடுத்துக்கொள்வது உடல்நலத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் இந்த ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் பொழுது, சப்ளிமெண்ட்டுகளை மட்டும் நம்பி இருக்காமல் இயற்கையாகவே கால்சியம் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

கார்டியோவாஸ்குலர் அதாவது இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இதய நோய் வராமல் தடுப்பதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சப்ளிமெண்ட்கள் தொடர்ந்து பலன் அளிக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதையும் இந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.



வைட்டமின் டி மற்றும் கல்சியம் சப்ளிமெண்ட் – பக்கவாத அபாயம் ஏற்படுத்தலாம்

அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின் ஆர்ட்டரிகளில் ஏற்படுத்தக்கூடிய அடைப்பு மற்றும் கொழுப்பு சேர்ந்து பலவீனமாவது, ரத்தம் மற்றும் ஆக்சிஜன் ஓட்டம் குறைவது ஆகியவை அதிலோஸ்க்லெரோசிஸ் என்ற ஒரு அபாயத்தை ஏற்படுத்தும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை சேர்ந்து எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சனை ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் என்ற ஜர்னலில் வெளியான ஆய்வின் படி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ரேண்டம் சோதனையில், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் 17 சதம் வரை அதிகரித்துள்ளது.

உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

என்ன சப்ளிமெண்ட்டுகள் அதிகமாக பயன்படுத்துகிறோம்?

விட்டமின் b12, பையோடின், கால்சியம், விட்டமின் டி, விட்டமின் சி, விட்டமின் ஈ, ஃபோலிக் ஆசிட், ஜின்க், செலீனியம், மெலடோனின், இரும்புச் சத்து, ஆகிய ஊட்டச்சத்துக்களை சப்ளிமெண்ட் வடிவில் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்று நம்பி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பலரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் எந்த சப்ளிமெண்ட் ஆக இருந்தாலும் அது ஓவர்டோஸ் ஆகும் போது உடலுக்கு தீவிரமான பாதிப்பை விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.



மருத்துவர்களின் பரிந்துரை ஏன் அவசியம்?

ஊட்டச்சத்துக்கான சப்ளிமெண்ட்ஸ் என்பதால் இது ஓவர் டோஸ் ஆகிறது என்பதை பெரும்பாலானவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. இதற்கென்று தனியாக எந்த அறிகுறிகளும் காட்டாது. ஒரு சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பல்வேறு காரணங்களில் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, ஏற்கனவே உள்ள உடல் நல பாதிப்புகள், ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான் எந்த சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் மட்டும் தான் சரியாக கூற முடியும்.

உடல் எடையை சீக்கிரமே குறைக்க இந்த 5 டிரிங்க்ஸ் குடிங்க... கொழுப்பை எளிதில் கரைச்சிடும்..

மேலும், எப்போது சப்ளிமெண்ட் எடுக்கத் தொடங்க வேண்டும் என்பதை விட, எந்த டோஸ் மற்றும் எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானது. எனவே, சப்ளிமெண்ட்டுகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றியமையாதது.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத பொழுது அதை சப்ளிமெண்ட் வழியாக பெறலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்களை பெற முடியாது என்ற பட்சத்தில் மருத்துவர்களின் உதவியோடு சப்ளிமெண்ட்களை குறிப்பிட்ட காலம் வரை சாப்பிடுவது பாதிப்புகளை தடுக்க உதவும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer symptoms, Vitamins

அடுத்த செய்தி