உணவு, உடை, வாழ்க்கைமுறை என்று குளிர் காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வோம். சிலரால் குளிர்காலத்தை இயல்பாக எதிர்கொள்ள முடியும் என்றாலும், ஒரு சிலரால் குளிரைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆண்டும் சீதோஷண நிலை பல்வேறு மாறுதல்களை சந்தித்து வருவதால் குளிர், வெயில், மழை என்று ஆண்டு தோறும் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
என்ன செய்தால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியும், உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள முடியும்?
குளிர்காலத்தை எளிதாக எதிர்கொள்ள கூடிய ஒரு ரகசியப் பொருள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மக்ஹிஜா நம்மோடு பகிர்ந்துள்ளார்.
குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக வைத்திருக்க உதவும் அந்த ரகசியபொருள் தண்ணீர் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் பூஜா பகிர்ந்துள்ளார்.
தண்ணீர் எப்படி நம்மை குளிர்காலத்தில் கதகதப்பாக உணரச்செய்யும்?
குளிர்காலத்தில் தாகம் எடுக்காத காரணத்தால் வழக்கத்தை விட குறைவான அளவுதான் தண்ணீர் குடிப்போம். இதனால், பொதுவாகவே நீர்சத்து குறைபாடு ஏற்படும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடலில் இருக்கும் இரத்தத்தின் அடர்த்தி குறையும், ரத்த ஓட்டமும் குறையும். இவற்றால், உடலின் வெப்பம் குறைந்து, அதிகமாகக் குளிரும். உடலில் போதிய அளவு ரத்த ஓட்டம் இல்லாமல் உடல் குளிர்ச்சி அடையும் நிலைமைக்கு ஹைபோதெர்மியா என்று பெயர்.
எனவே இவற்றைத் தடுக்க, தடுக்க தண்ணீர் குடித்து உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்கலத்தில் மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார். விஸ்கி அல்லது ராம் உடலில் குளிர்ச்சியை உண்டாக்கி உடலின் வெப்பத்தை குறைக்கும்.
மது அருந்தும் போது உடல் வெப்பமாக சிலர் உணரக்கூடும். ஆனால், நேரம் செல்லச் செல்ல டெம்பரேச்சர் குறையும். அதுமட்டுமின்றி தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடல் தன்னை காத்துக் கொள்ளும் திறனையும் மது அருந்துவதால் இழக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீரைத் தவிர்த்து ஒரு சில சூடான பானங்களும் குளிர் காலத்தில் உடலை வெப்பமாக வைக்க உதவும்.
தேநீர்:
ஒரு கப் சூடான தேநீர் குடிப்பது, எந்த நேரத்திலும் உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கும். தேநீரில் பல வகைகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வகையில் விரும்பும் சுவையில், தேநீர் குடித்து உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள்..!
மஞ்சள் பால்:
கோல்டன் மில்க் என்று அழைக்கப்படும் மஞ்சள், மிளகு மற்றும் இஞ்சி சேர்க்கப்படும் சூடான பால், இதயம், எலும்பு, சரும ஆரோக்கியம் என்று பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பாதாம் பால்:
மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு பாதாம் சேர்க்கப்பட்ட பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் பல்வேறு மினரல்கள் மூளை சுறுசுறுப்பாக மட்டுமில்லாமல் குளிர் காலத்தில் உங்களை பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Warm Drinks, Winter