தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுடம் இந்தாண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான குளிர் நம்மை வாட்டி வதைக்கிறது. பொதுவாக குளிர்காலம் என்றாலே சூடான காபி, சூடான நீர் உள்ளிட்ட சூடான உணவுகளைத் தான் நாம் சாப்பிட விரும்புவோம். இவை குளிருக்கு நல்ல இதமான சூழலை நமக்குத் தரக்கூடும். ஆனால் தலைமுடி மற்றும் சரும பராமரிப்பு என்று வரும் போது பச்சை தண்ணீரினை நாம் உபயோகிக்கும் போது முகம் வறண்டு போவதோடு, தலைமுடியில் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
இந்த சூழலில் தான், நாம் குளிர்காலத்தில் தலைமுடி பராமரிப்பிற்கு குளிர்ந்த நீர்? அல்லது சூடான நீரில் எதை உபயோகிக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படும். இதோ ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…
குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் எது சிறந்தது?
குளிர்காலம் என்றாலே தண்ணீரைக் காய்ச்சி சூடான நீரினால் தான் குளிக்க வேண்டும் என்று நினைப்பு அனைவருக்கும் ஏற்படும். ஆனால் தொடர்ச்சியாக குளிப்பதற்கு நாம் வெந்நீரை உபயோகிக்கும் போது உச்சந்தலையில் வறட்சி ஏற்படுகிறது. குறிப்பாக வெந்நீர் தலைமுடியில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்பை பாதிக்கச் செய்வதால் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லையை ஏற்படுத்துகிறது. இதோடு முடியின் வேர்கள் வலுவிழந்து முடி உதிர்தல் பிரச்சனையையும் ஏற்படுகிறது. மேலும் சூடு தண்ணீரில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன, இது நீரின் pH ஐ உயர்த்துகிறது. ஆனால் இது முடியின் pH ஐ விட அதிகமாகும். முடியின் pH இன் மாற்றம் மந்தமாகவும் சிக்கலாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதோடுவெந்நீர் குளியல் உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது. இருப்பினும், இது சருமத்தை மிகவும் வறண்டதாக மாற்றும். இருந்தப் போதும் நீங்கள் சுடு தண்ணீரில் குளிக்கிறீர்கள் என்றால், உங்கள் சருமம் சேதமடையாமல் இருக்க குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதோடு தலைமுடி பராமரிப்பிற்கு ஆர்கானிக் ஷாம்பு, மினரல் ஆயில், சிலிகான்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் இல்லாத தாவர எண்ணெய்கள் மற்றும் கண்டிஷனரைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இது உங்கள் முடிக்கு அதிக நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதனால் குளிர்காலத்தில் ஏற்படும் சருமம் மற்றும் முடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
அதே சமயம் குளிர்ந்த நீரில் நாம் குளிக்கும் போது, தலைமுடியை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவியாக இருப்பதோடு பொடுகு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் மனச் சோர்வை நீக்கி நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது. குளிர்ந்த நீரில் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தும் போது ஈரப்பதத்தை அப்படியே வைத்திருக்கும். அவற்றை உலர்த்துவதற்கு வெப்பமூட்டும் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் தலைமுடியை ஒரு துண்டில் போர்த்தி, கூடுதல் தண்ணீர் உறிஞ்சப்பட்டவுடன், அவற்றை காற்றில் உலர விடவும். இது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடிக்கு வழிவகுக்கிறது.
Also Read : தனியாக இருக்கும் போது நீங்கள் இந்த விஷயங்களை செய்யுங்க.. நிச்சயம் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க
வெந்நீர் மற்றும் பச்சை தண்ணீர் இரண்டுமே தலைமுடிக்கு சில விஷயங்களில் ஏற்றது என்றாலும், எப்படி நாம் தலைமுடியைப் பாதுகாப்பாக பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair care, Hair Problems