Home /News /lifestyle /

கோலா பானங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கிறதா..? எச்சரிக்கும் ஆய்வு..!

கோலா பானங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கிறதா..? எச்சரிக்கும் ஆய்வு..!

மூளையை பாதிக்கும் கோலா பானங்கள்

மூளையை பாதிக்கும் கோலா பானங்கள்

எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு , உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம், கணைய புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயங்களுடன் கோலா நுகர்வு இணைக்கப்பட்டு உள்ளது. எனவே முடித்த வரை கோலாவை தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் நிலையில், கோலாக்கள் மனிதர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை வெகுவாக பாதிக்க கூடும் என்றது ஆய்வு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பீட்சா, பர்கர் அல்லது ஃபிரை செய்யப்பட்ட பல உணவுகளுடன் துணை பானமாக பலரால் விரும்பி குடிக்கப்படுகிறது கோலா. இனிப்பு, சுவை மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானமாக இருக்கும் பெரும்பாலான கோலாக்களில் காஃபின் அடங்கி இருக்கிறது.

சுகர் அல்லது அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் மூலம் இந்த கோலா பானத்திற்கு இனிப்பு சுவை ஊட்டப்படுகிறது. உலகளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,800-க்கும் மேற்பட்ட கோலா தயாரிப்புகள் கிடைத்தாலும் தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் 2 கோலா நிறுவனங்களில் ஒன்று கோகோ-கோலா மற்றொன்று பெப்சி. கோலா பானங்களை தொடர்ந்து பருகுவதால் உடலுக்கு எண்ணற்ற தீமைகள் ஏற்படுவதை பல ஆய்வுகள் நிரூபித்து உள்ளன.

எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு , உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம், கணைய புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயங்களுடன் கோலா நுகர்வு இணைக்கப்பட்டு உள்ளது. எனவே முடித்த வரை கோலாவை தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் நிலையில், கோலாக்கள் மனிதர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை வெகுவாக பாதிக்க கூடும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரேசிலின் Santa Catarina-வில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்றில், கோலா அடிப்படையிலான பானங்கள் வெவ்வேறு வயது மக்களிடையே நினைவாற்றல் குறைபாடுகளை தூண்டுவது தெரிய வந்துள்ளது.



Experimental Gerontology என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவலில், இது தொடர்பான பரிசோதனை எலிகளை வைத்து நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டன. ஒரு குழுவில் இருந்த எலிகளுக்கு தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்றொரு குழு எலிகளுக்கு கோலா மற்றும் தண்ணீரின் கலவை அருந்த கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் கோலாவை பருகிய எலிகளுக்கு நினைவாற்றல் திறன் குறைந்தது கண்டறியப்பட்டது.

தண்ணீர் குடிப்பதற்கு கூட இத்தனை ரூல்ஸ் இருக்கா..? நீங்க இதையெல்லாம் ஃபாலோ பண்றீங்களா..?

தவிர கோலாவை குடித்த குழுவில் இருந்த எலிகளுக்கு Oxidative stress இருந்ததும் கண்டறியப்பட்டது. உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது Oxidative stress ஏற்படுகிறது. உடலில் இருந்து நச்சுகள் சரியாக வெளியேற்றப்படாததன் காரணமாக Oxidative stress ஏற்படுகிறது. இதனை பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



எனவே கோலா அடிப்படையிலான குளிர்பானங்களை நீண்ட காலம் பருகுவது நினைவாற்றல் குறைபாடு மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸிற்கு வழிவகுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கோலா அனைத்து வயதினருக்கும் ஆக்ஸிடேட்டிவ் சிஸ்டமில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும், வயது குறைவானவர்கள் குளிர்பானங்களால் ஏற்படும் உடல்நல மாற்றங்களால் மிக எளிதில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவு குறிப்பிட்டு உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Brain Health, Sugary Drinks

அடுத்த செய்தி