ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS இருந்தா காஃபி குடிக்கக் கூடாதாம் : நிபுணர்கள் கருத்து..!

PCOS இருந்தா காஃபி குடிக்கக் கூடாதாம் : நிபுணர்கள் கருத்து..!

காஃபி

காஃபி

ஒரு நாளைக்கு ஐந்து கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்று பொதுவாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு நாளைக்கு அதிக அளவு காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக பெண்கள் பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி என்று சொல்லபப்டும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதும் ஒன்று. ஆண்ட்ரஜன் என்ற ஹார்மோன் அதிகம் சுரப்பதால், கருப்பையில் இருக்கும் முட்டைகளில் சிறுசிறு நீர்க்கட்டிகள் உண்டாகும்.

PCOS பிரச்சனை மாதவிடாய் கோளாறு முதல் நீரிழிவு, தீவிரமான மன அழுத்தம் ஆகியவற்றை உண்டாக்கலாம். PCOS என்பது எளிதில் சரி செய்யக் கூடியது தான். ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரி செய்யும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, உணவுப் பழக்கம் மாறினாலே, நீர்க்கட்டி சரியாகிவிடும்.

எந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும் என்பது போல, எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதும் உள்ளது. அந்த அடிப்படையில், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பவர்கள், காஃபி குடிக்கக் கூடாதாம். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஈஸ்ட்ரஜன் அளவைக் குறைக்கும் காஃபி

காபியில் இருக்கும் காஃபின் என்ற ஊக்கமளிக்கும் காம்பவுண்ட், ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தேசிய சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. காபி குடிக்கும் போது நாம் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வோம்; மந்தமான நிலை மாறிவிடும்; புதிய ஆற்றல் பிறக்கும். காஃபி நம்முடைய மூளையில் சுறுசுறுப்பாக்கி உற்சாகமாக செயல்பட வைக்கிறது. ஆனால், இதுவே ஒரு பெண்ணின் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி ஒரு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதைப்பற்றி மகப்பேறியல் மற்றும் பெண்கள் நல மருத்துவரான மருத்துவர் ஜக்ரித்தி வர்ஷ்னே கூறுகையில், “பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் காபியை குறைவாக குடிக்க வேண்டும். மேலும், எந்த உணவாக இருந்தாலுமே அதை அதிகமாக குடிக்கும் பொழுது அது பிசிஓஎஸ் நிலையை தீவிரமாக்கும்” என்று கூறியிருக்கிறார்

காஃபி குடிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமா?

ஒரு நாளைக்கு ஐந்து கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்று பொதுவாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு நாளைக்கு அதிக அளவு காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் காஃபியை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமா என்று கேட்டால் இல்லை, தவிர்க்க வேண்டாம் என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பிசிஓஎஸ் இருந்தால், வழக்கமாக குடிப்பதை விட குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப் காஃபி குடித்தால், அதை 2 என்று குறைத்துக் கொள்ளலாம்.

Also Read : மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்க பெண்கள் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வழிமுறைகள்..!

இது ஹார்மோன் கோளாறு என்பதால், ஆண்ட்ராஜன் ஹார்மோன் அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து, பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். அதேபோல ஆன்டி-ஆக்ஸிடென்ட் என்று உடல் செல்களில் இருந்து புத்துணர்ச்சி அளிக்கும், இளமையை தக்கவைக்கும் காம்பவுண்ட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும், அழற்சி ஏற்படுத்தும் ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

பிஸிஓஎஸ் நிவாரணத்துக்கு உதவும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் :

ஏற்கனவே கூறியுள்ளது போல பிசிஓஎஸ் என்பது ஒரு லைஃப் ஸ்டைல் குறைபாடு என்று கூறலாம். வாழ்க்கை முறையில் நீங்கள் குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொண்டாலே கருப்பை ஆரோக்கியம் மேம்பட்டு இந்த குறைபாடு தானாகவே சரியாகிவிடும்.

பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும் பெண்கள் தினசரி 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் பொழுது உடல் ஆரோக்கியமாவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கும்.

Also Read : கர்ப்பவாய் புற்றுநோயால் ஆண்டுக்கு 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறப்பு : நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த அறிவுரை..!

பிசிஓஎஸ் குறைபாட்டால் பல்வேறு நோய்கள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்படலாம். அதில் செரிமான கோளாறு, நீரிழிவு நோய், ஆகியவையும் அடங்கும். எனவே இவற்றை தவிர்ப்பதற்கு உணவில் அதிகப்படியான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடலுக்கு ஊட்டச்சத்து எவ்வளவு தேவையோ அதே அளவுக்கு ஓய்வும் தேவை. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகிய இரண்டுமே உடலை தீவிரமாக பாதிக்கும். ஹார்மோன் கோளாறுகளுக்கு தூக்கமின்மையும் அதிகப்படியான மன அழுத்தமும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, மன அழுத்தம் கூட பிசிஓஎஸ் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே மன அழுத்தத்திற்கான காரணியை கண்டுபிடித்து அதை சரி செய்ய முயற்சியுங்கள். அதேபோல தினசரி உங்கள் உடலுக்கு எவ்வளவு தூக்கம் தேவையோ அந்த அளவுக்கு தூங்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Coffee, PCOS