• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவாசக் குழாய் முதல் உணவுக் குழாய் வரை.. தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் இத்தனை நன்மைகளா..?

சுவாசக் குழாய் முதல் உணவுக் குழாய் வரை.. தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் இத்தனை நன்மைகளா..?

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

தேங்காய் எண்ணெய் மிகவும் முக்கியமானது, தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மூலப்பொருள், இது செரிமானத்தை மேம்படுத்துவதிலிருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

  • Share this:
தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாய் கொப்புளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தொண்டை புண் இருக்கும்போது நம்மில் பெரும்பாலோர் ஆயில் புல்லிங் செய்கிறோம். இருப்பினும், தொண்டை புண் இருப்பவர்கள் மட்டும் தான் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால முறையாகும். எண்ணெய் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பதால் உங்கள் தொண்டை மற்றும் வாய் பகுதி சுத்தமாகிறது.

தினசரி ஆயில் புல்லிங் செய்வதால், சுவாசம், உணவுக்குழல் பகுதியில் தோன்றும் தொற்று குறையும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானோர் உப்பு தண்ணீரில் வாய் கொப்புளிப்பதை விரும்புகின்றனர். ஆனால் உப்பு தண்ணீர் மட்டுமின்றி எண்ணெய்கள் கொண்டு வாய் கொப்புளிப்பதாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

அதில் தேங்காய் எண்ணெய் மிகவும் முக்கியமானது, தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மூலப்பொருள், இது செரிமானத்தை மேம்படுத்துவதிலிருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. குறிப்பாக பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்கள், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.



ஆயில் புல்லிங் செய்முறை :

முதலில் 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் வாயில் வைக்கவும். இப்போது மெதுவாக வாய் முழுவதும் படும்படியாக கொப்புளிக்க தொடங்குங்கள். இப்படி செய்யும் நேரத்தில் நீங்கள் எண்ணெய்யை முழுங்காமல் கவனமாக இருங்க வேண்டும். சில நிமிடங்கள் செய்து முடித்ததும், எண்ணெய்யை துப்பி விடவும். பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு கொப்புளித்து வாஷ் செய்து கொள்ளவும். இதனை தினமும் காலையில் செய்து வருவது நல்லது.

* மேற்கண்ட முறையில் தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் தொண்டை புண் குணமாவது மட்டுமின்றி, வாய் மற்றும் சுவாசக் குழாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.

* தேங்காய் எண்ணெய் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் பற்களுக்கு இடையில் உள்ள தொற்றுகள் நீங்குகிறது மற்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

* பொதுவாகவே தேங்காய் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையை பெற்றுள்ளது. தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், வாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும், ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் அறியப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாய் கொப்புளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

* ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.



மருத்துவ நிபுணர்கள் கூறுவதென்ன?

தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து டீப் சந்த் பந்து மருத்துவமனையின் மூத்த முகேஷ் சிங் பச்சரா விளக்கினார். அதில், வாயில் புண்கள் ஏற்பட்டால் அதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். வாயில் புண்களைக் குணப்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன. மேலும் இது உங்கள் வாயை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வாயில் வீக்கத்தைக் குறைக்கும் என மருத்துவர் தகவல் அளித்துள்ளார்.

* நீங்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளிப்பதால் தொண்டையில் உள்ள பாக்டீரியாவையும் அழிக்க முடியும். இதனால் தொண்டை அரிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

நோய் எதிப்பு சக்தி முதல் புற்றுநோய் வரை...தேன் மகரந்தத்தில் இத்தனை ஊட்டச்சத்துகளா..?

* மழைக்காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும் பிரச்னையை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் ஆயில் புல்லிங் செய்யலாம். இதனால் நாசி பகுதியில் உள்ள சளி நீங்கிவிடும்.

* தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும் நீங்கள் அதிகமாக வாய் கொப்புளிக்க வேண்டாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார், எனவே நீங்கள் ஏதேனும் அசவுகரியமாக உணர்ந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது என முகேஷ் சிங் பச்சரா கூறுகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: