காலநிலை மாற்றத்தின் மூலம் மலேரியாவை ஒழிக்க முடியுமா? ஆய்வு செய்ய குழு அமைப்பு!

மாதிரி படம்

இந்திய வானிலை ஆய்வு துறையின் இயக்குநர் மோகன்பாத்ரா, "மலேரியா நாடு முழுவதும் அச்சுறுத்தக்கூடிய நோயாக உள்ளது என்று கூறியுள்ளார்.

  • Share this:
2030ம் ஆண்டுக்குள் மலேரியாவை முழுமையாக ஒழிப்பதற்கு காலநிலை மூலம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மலேரியாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை மலேரியா நோ மோர் ( Malaria No More) என்ற அரசு சாரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தக் குழுவில் சுகாதாரம், காலநிலை மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் நவீன கருவிகளின் அடிப்படையில் மலேரியாவை முன்பே கணித்தது, அதனைக் கட்டுப்படுத்தவும், சூழலியலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர்.

இது குறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு துறையின் இயக்குநர் மோகன்பாத்ரா, "மலேரியா நாடு முழுவதும் அச்சுறுத்தக்கூடிய நோயாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு துறை நிபுணர்களுடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வு மையமும் பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளது. தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் காலநிலை தொடர்பான உயர்தர தரவுகளை சேகரித்து, காலநிலையும், மலேரியா பரவுலுக்கும் இடையே உள்ள தொடர்பு, அதனை முன்கூட்டியே கணித்து கட்டுப்படுத்துவது, இதற்காக தேசிய அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த புதிய குழு ஆய்வு நடத்தும். மலேரியாவை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் மஞ்சு ராகி பேசும்போது, "தற்போதைய நிலையில் காலநிலை மாற்றம் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கவனத்தில் கொண்டுள்ளோம். காலநிலை மற்றும் சுகாதாரம் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளதால், காலநிலை மூலம் மேற்கொள்ள வேண்டிய அல்லது மேம்படுத்த வேண்டியவற்றை ஆய்வு செய்து, அதன்மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

Zinc Rich Food : உங்கள் தினசரி உணவில் இந்த 7 ஸிங்க் உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

மலேரியா போன்ற நோய்களுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் மிகப்பெரிய தொடர்புகள் இருக்கின்றன. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளிலும் இவை உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், இதன்மூலம் மலேரியாவுக்கு தீர்வு காண முயற்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்து மேற்கொண்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார். கொசு மூலம் உருவாகும் மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த, தரவுகள் மற்றும் சரியான திட்டமிடல் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என Malaria No More நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாடு தழுவிய ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளும்போது, மலேரியாவை ஒழிக்கும் இலக்கு என்பது சாத்தியப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் மலேரியா இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதை முன்மாதிரியாகக் கொண்டு செயல்திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். Malaria No More அமைப்பு சேகரிக்கும் வானிலை முன் கணிப்பு, சுகாதார கட்டமைப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரச்சாரம், விழிப்புணர்வுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுதல் ஆகியவை மலேரியா ஒழிப்பதை சாத்தியப்படுத்தும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: