ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அல்சைமர் நோய் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்..? அறிகுறிகளும்... காரணங்களும்...

அல்சைமர் நோய் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்..? அறிகுறிகளும்... காரணங்களும்...

ஹெம்ஸ்வொர்த் - அல்சைமர்

ஹெம்ஸ்வொர்த் - அல்சைமர்

இந்த நோய் ஏற்பட்டால் அதிகப்படியான ஞாபகம் மறதி மற்றும் அறிவாற்றல் குறைதல் ஆகியவை ஏற்படும். மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறைவதால் இந்த ஞாபகம் மறதி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த நோயினால் ஒரு நபரின் அன்றாட செயல்கள் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் நடத்தை மற்றும் தனித்தன்மைகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல ஹாலிவுட் நடிகை க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்திற்கு மரபணு காரங்களால் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் பிரபலமாக நடிகர்கள் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். அவெஞ்சர்ஸ், தோர் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சில காலங்களுக்கு முன்னரே அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தமக்கு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் செய்து கொண்ட மரபணு பரிசோதனையின் போது இந்த விஷயம் தெரிய வந்துள்ளதாக அவர் வெளிப்படையாக ஊடகத்தில் கூறியுள்ளார்.

APOE 4 எனப்படும் மரபணுக்களின் இரண்டு நகல்கள் இவரிடம் காணப்படுவதாகவும், இதனால் மரபணு வழியாக அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்தார்களாம். அல்சைமர் நோயை கண்டறிவதற்கு இது சரியான முறை இல்லை என்றாலும் கூட, எதிர்காலத்தில் இந்த நோய் அவருக்கு வராது என்பதற்கு எந்தவித உறுதியும் அளிக்க முடியாது. தனக்கு இந்த மரபணு ரீதியான பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளதால் சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகி இருக்க யோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அல்சைமர் நோய் என்றால் என்ன?

அல்சைமர் நோய் என்பது நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் அதிகப்படியான ஞாபகம் மறதி மற்றும் அறிவாற்றல் குறைதல் ஆகியவை ஏற்படும். மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறைவதால் இந்த ஞாபகம் மறதி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். டிமன்ஷியா என்று அழைக்கப்படும் ஞாபகம் மறதி மற்றும் அறிவாற்றல் குறைதலினால் அன்றாட செயல்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். அல்சைமர் நோயின் விளைவாக இந்த டிமன்ஷியா ஏற்படுகிறது.

இந்த நோயினால் ஒரு நபரின் அன்றாட செயல்கள் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் நடத்தை மற்றும் தனித்தன்மைகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் டிமன்ஷியா நோயினால் பாதிக்கப்பட்ட 60%-ல் இருந்து 70% நபர்களுக்கு அல்சைமர் நோயால் டிமன்ஷியா உண்டாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 வயதுக்கு கீழ் உள்ள மக்களில் 10 சதவீதம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ப்ளேக்ஸ் மட்டும் டேங்கிள்ஸ் என்று இரண்டும் தான் மூளையில் உள்ள நரம்பு செல்களை கொல்வதற்கு காரணமாக அமைவதாக அல்சைமர் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் இந்த பிளேக்ஸ் மற்றும் டேங்கில்ஸ் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும், ஞாபகத்திறனை கட்டுப்படுத்தும் பகுதியில் இருந்து இவை வளர தூங்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிகுறிகள்:

நம் உடலுக்கு எப்படி வயதாகிறதோ, அதேபோல நம்முடைய மூளைக்கும் வயதாகும். வயது அதிகரிக்க அதிகரிக்க சிலருக்கு ஞாபகம் மறதியும், யோசிப்பதில் தாமதமும் ஏற்படும் இது இயற்கையானது. ஆனால் சிலருக்கு அடிக்கடி ஞாபகம் ஞாபக மறதி, குழப்பம் மற்றும் மனநிலை சம்பந்தமாக பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவை அனைத்துமே மூளையில் உள்ள மூளை செல்கள் சரியாக வேலை செய்யாததின் அறிகுறி. புதிதாக கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை நினைவுபடுத்த முடியாமல் இருப்பது என்பது அல்சைமர் நோய் அறிகுறியாக கூறப்படுகிறது.

Also Read : பிரெய்ன் ஃபாக் நிலையை சரி செய்ய உதவும் முக்கிய 5 ஊட்டச்சத்துக்கள் இதோ..

ஏனெனில் இந்த அல்சைமர் நோய் மூளையின் ஞாபகத்தில் கட்டுப்படுத்தும் பகுதியை தான் முதலில் பாதிக்கிறது. அங்கிருந்துதான் இந்த நோய் பரவ துவங்குகிறது. நாளடைவில் மூளையின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நோயாளியின் நடத்தையில் மாற்றம், அடிக்கடி மனநிலையில் மாற்றம், குழப்பம் ஆகியவை ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கபடலாம். சில நேரங்களில் நடப்பதற்கும் பேசுவதற்கும் கூட பிரச்சனை ஏற்படலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Alzheimer Disease, Brain Health, Memory Loss