ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் வித்தியாசம் என்ன..? கட்டுப்படுத்தும் வழிகள்...

நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் வித்தியாசம் என்ன..? கட்டுப்படுத்தும் வழிகள்...

கொலஸ்ட்ரால் அளவு

கொலஸ்ட்ரால் அளவு

கொலஸ்ட்ரால் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதைப் போல கொலஸ்ட்ரால் என்றாலே தீங்கானது என்ற வாதம் தவறானதாகும். நம் உடலில் பல்வேறு செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் முக்கியமானதாக இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொலஸ்ட்ரால் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதைப் போல கொலஸ்ட்ரால் என்றாலே தீங்கானது என்ற வாதம் தவறானதாகும். நம் உடலில் பல்வேறு செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால், அளவுக்கு மீறி கொலஸ்ட்ரால் இருப்பது நம் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் தான் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக கொலஸ்ட்ரால் பார்க்கப்படுகிறது.

கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்வது எப்படி..?

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை ரத்தப் பரிசோதனையின் மூலமாக துல்லியமாக கணக்கிட முடியும். ரத்தப் பரிசோதனையின்போது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் ஹெச்டிஎல், எல்டிஎல், டிரைகிளிசரைடு போன்ற அளவுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. கொலஸ்ட்ராலை கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனையை லிபிட் ஃபுரொபைல் பரிசோதனை என்று குறிப்பிடுகின்றனர்.

ஹெச்டிஎல் நல்லது, எல்டிஎல் கெட்டது..?

உயர் அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால்களை ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் என்று சொல்கிறோம். இது ரத்தத்தில் அதிகமாக இருந்தால், நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் மூலமாக தீங்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறையும். அதுவே குறைவான அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மிகுதியாக இருப்பின், நம் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய இதய நோய்கள், ஸ்டிரோக் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால், எல்டிஎல் மற்றும் ஹெச்டிஎல் ஆகியவை தான் நமது கொலஸ்ட்ரால் அளவுகளை தீர்மானிப்பதாக இருக்கின்றன. எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்பது 100 mg/dL என்ற அளவில் இருந்தால் அது இயல்பானதாகும். ஒருவேளை எல்டிஎல் அளவுகள் 190 mg/dL என்ற அளவில் இருந்தால் இதய நோய்களுக்கான அபாயம் அதிகமாகும்.

ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் 200 mg/dL என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த வரையறையை மீறி கொலஸ்ட்ரால் இருக்குமானால் அது உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

Also Read : சர்க்கரை மட்டுமல்ல... நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானதுதான்..!

அளவு அதிகமாக இருப்பின் அபாயகரமானதா..?

கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தால் அது முற்றிலுமாக அபாயகரமானது என்று சொல்லிவிட முடியாது. அதே சமயம், நீரிழிவு அல்லது ஸ்டிரோக் போன்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளவுக்கு மீறி கொலஸ்ட்ரால் இருக்குமானால் அது எச்சரிக்கை மிகுந்த விஷயமாகும் என்று அஹமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் மஹரிஷி தேசாய் குறிப்பிடுகிறார்.

ஒருவரது குடும்ப நோய் வரலாறு, வயது, எடை, இனம், பாலினம், உணவுப் பழக்கம், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு விஷயங்களுடன் இணைத்து கொலஸ்ட்ரால் அளவுகளை மருத்துவர்கள் பரிசீலனை செய்கின்றனர்.

ஹெச்டிஎல் எப்போதும் நல்லதா..?

நம் உடலில் கல்லீரலுக்கும், பிற பகுதிக்கும் ரத்தத்தின் மூலமாக கொலஸ்ட்ராலை கொண்டு சேர்க்கும் பணியை ஹெச்டிஎல் மேற்கொள்கிறது. ரத்தக் குழாய்களில் கட்டிகள் உருவாகுவதை இது தடுக்கிறது. ஹெச்டிஎல் கொலஸ்ரால் நல்லது தான் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாலும், மிக அதிகப்படியான அளவுகள் உடல் நலனுக்கு தீங்காக அமையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டிரைகிளிசரைடு

பொதுவாக கொலஸ்ட்ரால் குறித்து பரிசீலனை செய்யும் நபர்கள் அல்லது விவாதிக்கும் நபர்கள் எல்டிஎல், ஹெச்டிஎல் ஆகிய கொலஸ்ட்ரால் அளவுகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், மிகவும் ஆபத்தானதும், பலரும் பரிசீலிக்க தவறுவதும் இந்த டிரைகிளிசரைடு அளவுகள் தான். இது எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

Also Read: கர்ப்ப காலத்தில் ஏன் ஹீமோகுளோபின் அளவை தக்க வைப்பது அவசியம்..? இரத்த சோகை வந்தால் என்ன ஆகும்..?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது எப்படி..?

தினசரி உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். அதேபோல ஆரோக்கியமான ஃபேட் நிறைந்த, குளிர் அழுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை உபயோகிப்பது நல்லதாகும். குறிப்பாக ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம். அதே சமயம், சமையல் எண்ணெயை பொறுத்தவரையில் ஒரே எண்ணெயை மட்டும் பயன்படுத்தாமல், 2 அல்லது 3 விதமான எண்ணெய்களை மாற்றி, மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சுக்லா அறிவுறுத்துகிறார்.

First published:

Tags: Cholesterol