ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா..? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என தகவல்..!

காலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா..? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என தகவல்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அந்த நாள் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்த உடனேயே காபி அல்லது தேநீரை குடித்து, ஃபிரெஷாக்கிக் கொள்கிறார்கள். அதேபோல காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து நிறைந்த உடனடி ஆற்றல் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகள் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சீக்கிரமே பசி எடுப்பதால் அடுத்தடுத்து பானம், தின்பண்டம் என்று மதிய உணவுக்கு முன்பேவே அதிகமாக பசி எடுக்க துவங்கிவிடும்.

காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு இல்லாதவர்களுக்கு கூட ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்கும். எனவே, எல்லோருக்குமே சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றால் அனைவருமே காலையில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

Read More : சர்க்கரை நோயாளிகள் இந்த மாவு வகைகளை தினசரி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது..!

காலையில் பசிக்கிறது என்று ஒரு வாழைப்பழம் அல்லது பேரீச்சையை சாப்பிட்டால் அது உடனடியாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடனே பசியைத் தூண்டி விடும். எனவே காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது எந்த மாயாஜாலமும் செய்து உங்களுக்கு ஆற்றல் தராது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொழுப்பும் கூட உடலில் ஆற்றலாக மாறும் தன்மை கொண்டது. உடலில் கார்ப்ஸ் இல்லாத பொழுது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு ஆற்றலாக மாறும்.

காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும்?

காலையில் நீங்கள் சாப்பிட்ட பின்பு ஆற்றல் குறையாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.
கொழுப்பு என்பது நம் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் ஒரு ஊட்டச்சத்து. எனவே உடலுக்கு மட்டுமல்லாமல், கொழுப்பு நிறைந்த உணவுகள் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கும். நீங்கள் வழக்கத்தை விட துரிதமாக தெளிவாக சந்திப்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாகவும் செய்ய முடியும். அது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பும் குறையும்.
நல்ல கொழுப்பு என்பது இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்ற செரிமான கோளாறு மற்றும் நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மிகச் சிறந்த நிவாரணமாக அமையும். எனவே காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருக்கும் பட்சத்தில், காலையில் கொழுப்பு நிறைந்த மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரியாகி மாதவிடாய் சுழற்சி சீராகும். வழக்கமாக மாவு சத்து நிறைந்த உணவுகளுக்கு பதிலாக, காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளுடன் ஒமேகா சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் முறையற்ற மாதவிடாய் சீராக அமையும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Diabetic diet, Fatty food