கோவிட்-19 : ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறன் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் - ஆய்வு

கோவிட்-19 : ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறன் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் - ஆய்வு

கொரோனா தொற்று பாதுகாப்பு

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களை விட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகம் உருவாக்குவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

  • Share this:
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீச துவங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதுமே பொதுவான விஷயமாக பார்க்கப்படுவது தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெரியவர்களை விட வெகு விரைவில் குணமடைகின்றனர். எனவே இது தொடர்பாக பல நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களை விட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகம் உருவாக்குவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வறிக்கை ஜமா நெட்வொர்க் ஓபனில்(JAMA Network Open) வெளிவந்துள்ளது. ஜமா நெட்வொர்க் ஓபன் என்பது அமெரிக்க மருத்துவ சங்கம் உயிரியல் மருத்துவ அறிவியலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு மாதாந்திர மருத்துவ இதழாகும். இந்த இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையானது தொடர்ந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது ஏன் பெரியவர்களை பாதிக்கும் அளவிற்கு குழந்தைகளை பாதிப்பதில்லை என்பதை விளக்குகிறது.



வொயில் கார்னெல் மெடிசின்(Weill Cornell Medicine) மருத்துவ பள்ளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு கடந்த ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே, நியூயார்க் நகரத்தில் எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 32,000 ஆன்டிபாடி சோதனைகளை ஆய்வு செய்தது. இதில் சுமார் 1,200 குழந்தைகள் மற்றும் 30,000 பெரியவர்கள் கடந்த கால நோய்த்தொற்றின் அறிகுறிகளை முறையே 17 சதவீதம் மற்றும் 19 சதவீதம் காட்டியதை ஆய்வில் கண்டறிந்தனர்.

உடலின் உயிரணுக்களை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் இம்யூனோகுளோபூலின் (IgG) எனப்படும் முக்கிய ஆன்டிபாடிகளின் அளவை தீர்மானிக்க, பாசிட்டிவ் முடிவு வந்த 85 குழந்தைகள் மற்றும் 3,648 பெரியவர்களிடம் செய்யப்பட்ட சோதனை முடிவுகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதன் முடிவில் 1 முதல் 10 வயது வரையிலான சுமார் 32 குழந்தைகளுக்கு, 19 முதல் 24 வயதுடைய 127 இளைஞர்களை விட சராசரி IgG அளவை விட கிட்டத்தட்ட5 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதை உறுதிப்படுத்த மற்றொரு ஆய்வாக 1 முதல் 24 வயது வரையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 126 நபர்களின் சோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.



இதில் 11 - 18 வயது வரையிலான இளம் பருவத்தினர் மற்றும் 19 - 24 வயது இளைஞர்களின் IgG ஆன்டிபாடிகளின் அளவை விட, 1-10 வயது வரையிலான குழந்தைகளின் IgG ஆன்டிபாடிகளின் அளவு சராசரியாக 2 மடங்கு அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் மற்றவர்களை விட தொற்றால் பாதிக்கப்படும் குழந்தை நோயாளிகளின் வயது தொடர்பான நோயெதிர்ப்பு திறனே காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Explainer : நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை..!

குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பான உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடையவர்கள் என்பதால் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட, அவர்களது உடல் விரைவில் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க ஒத்துழைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த புதிய ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் ஒரு முரண்பாடான முடிவு என்னவென்றால், ஆன்டிபாடி அளவு இளைஞர்களுக்கு மிகக் குறைவாக இருந்தது. ஆனால் வயதுக்கு ஏற்ப மீண்டும் உயர்ந்தது. இதை முழுமையாக விளக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: